惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
博客园 - 【当耐特】
H
Help Net Security
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
Y
Y Combinator Blog
C
Check Point Blog
博客园 - 司徒正美
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நந்திகிராம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்துக்கு எதி...
2026-04-26 · via hindutamil

சுவேந்து அதிகாரி - பபித்ரா கர்

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்த்தில் கடந்த 2021-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி, முதல்​வர் மம்தா உடன் நேரடி​யாக மோதி​னார். இதில் சுவேந்து வெற்றி பெற்​றார். இதன்​ பிறகு பவானிபூர் இடைத்​தேர்தலில் மம்தா போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

இந்த முறை நந்​தி​கி​ராம், பவானிபூர் ஆகிய இரு தொகு​தி​களில் சுவேந்து அதி​காரி களமிறங்கி உள்​ளார். இதில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் அவருக்​கும் திரிண​மூல் காங்​கிரஸ் வேட்​பாளர் பபித்ரா கர்​ருக்கும் இடையே கடும் போட்டி நில​வு​கிறது. பவானிபூரில் முதல்​வர் மம்தாவுக்கு எதி​ராக அவர் களமிறங்​கி​யிருக்​கிறார். இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் தேர்​தல் நடை​பெற்​றது. அங்கு சுவேந்து அதி​காரிக்கு பபித்ரா கர் கடும் சவாலாக உள்​ளார்.

திரிண​மூல் காங்​கிரஸில் சுவேந்து இருந்​த​போது அவரது வலது கரமாக பபித்ரா கர் செயல்​பட்​டார். கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்​பாக பாஜக​வில் சுவேந்து இணைந்​தார். அதே காலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸில் இருந்து வில​கிய பபித்ரா கர்​ரும் பாஜக​வில் ஐக்​கிய​மா​னார். ஆனால் பாஜக​வில் இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் பாஜக​வில் இருந்து வில​கிய பபித்ரா கர் மீண்​டும் திரிண​மூல் காங்​கிரஸில் இணைந்​தார்.

கடந்த 2016-ம் ஆண்டு திரிண​மூல் சார்​பிலும், கடந்த 2021-ம் ஆண்டு பாஜக சார்​பிலும் நந்​தி​கி​ராம் தொகுதி எம்​எல்​ஏ​வாக சுவேந்து அதி​காரி தேர்வு செய்​யப்​பட்​டார். இரு தேர்​தல்​களி​லும் அவர் வெற்றி பெற பபித்ரா கர் மிக முக்​கிய பணி​யாற்​றி​னார். திரிண​மூல், பாஜக ஆகிய இரு கட்​சிகளின் சார்​பில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் பபித்ரா தேர்​தல் பணி​யாற்​றி​யிருப்​ப​தால் அந்த தொகு​தியை பற்றி அவர் நன்கு அறிந்து வைத்​துள்​ளார்.

கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது மம்தாவை 1,956 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் சுவேந்து தோற்​கடித்​தார். இதே​போல இந்த முறை​யும் அவருக்​கும் பபித்ரா கர்​ருக்​கும் இடையே கடும் போட்டி நில​வக்​கூடும் என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​து உள்​ளனர்.

பாஜக​வின் முதல்​வர் வேட்​பாள​ராக சுவேந்து அதி​காரி மறை​முக​மாக முன்​னிறுத்​தப்​பட்டு வரு​கிறார். எனவே நந்​தி​கி​ராம்​ தேர்​தல்​ முடிவு​கள்​ மிகுந்​த எதிர்​பார்ப்​பை ஏற்​படுத்​தி உள்​ளன.