惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
C
Check Point Blog
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
美团技术团队
博客园 - 司徒正美
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
腾讯CDC
B
Blog
G
Google Developers Blog
The Cloudflare Blog
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து வ...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: அ​தி​முக எம்​எல்​ஏக்​களின்​ ராஜி​னா​மா ஏற்​கப்​பட்​டதை எதிர்த்​து அதி​முக கொற​டா தொடர்ந்​த வழக்​கில்​, பேர​வைத்​ தலைவர், பேர​வைச்​ செயலர்​ உள்​ளிட்​டோர்​ பதில்​ அளிக்​க உயர்​ நீதிமன்​றம்​ நோட்​டீஸ்​ பிறப்​பித்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில்​ கடந்​த மே 13-ம்​ தேதி தவெக அரசு மீதான நம்பிக்​கை வாக்​கெடுப்​பில்​ அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​ சி.வி.சண்​முகம்​, எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில்​ 25 அதி​முக எம்எல்​ஏக்​கள்​ தவெக​வுக்​கு ஆதர​வாக வாக்​களித்​தனர்​. இதையடுத்​து, கட்​சித்​ தாவல்​ தடைச்​ சட்​டத்​தின்​கீழ்​ அவர்​கள்​ 25 பேரை​யும்​ தகு​தி நீக்​கம்​ செய்​யக்​ கோரி பேர​வைத்​ தலை​வர்​ ஜேசிடி பிர​பாகரிடம்​ அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி மனு கொடுத்​தார்​.

இந்​நிலை​யில்​, அதி​முக எம்​எல்​ஏக்​கள்​ மது​ராந்​தகம்​ மரகதம்​ குமரவேல்​, பெருந்​துறை ஜெயக்​கு​மார்​, தா​ராபுரம்​ சத்​தி​ய​பா​மா, அம்​பாச​முத்​திரம்​ இசக்​கி சுப்​பை​யா ஆகியோர்​ எம்​எல்​ஏ பதவியை ராஜி​னா​மா செய்​வ​தாக பேர​வைத்​ தலை​வரிடம்​ கடிதம்​ அளித்​து​விட்​டு, உடனடி​யாக தவெக​வில்​ இணைந்​தனர்​.

கட்​சித்​ தாவல்​ தடைச்​ சட்​டத்​தின்​கீழ்​ அவர்​களை தகு​தி நீக்​கம்​ செய்​யு​மாறு மனு கொடுக்​கப்​பட்​டு நிலு​வை​யில்​ உள்​ள நிலை​யில்​, அவர்​களது ராஜி​னா​மாவை பேர​வைத்​ தலை​வர்​ ஏற்​றுக்​ கொண்டது சட்​ட விரோதம்​ என்​று கூறி அதி​முக கொற​டா அக்​ரி கிருஷ்ண​மூர்த்​தி,

தேசி​ய மக்​கள்​ சக்​தி கட்​சித்​ தலை​வர்​ எம்​.எல்​.ர​வி ஆகியோர்​ சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தில்​ தனித்​தனி​யாக வழக்​கு தொடர்ந்தனர்​. ‘ராஜி​னா​மா செய்​த 4 பேரும்​ மீண்​டும்​ தேர்​தலில்​ பங்​கேற்​கக்​ கூடாது. இந்​த வழக்​கு முடி​யும்​ வரை 4 தொகு​தி​களில்​ இடைத்​ தேர்​தல் அறிவிக்​க தடை வி​திக்​க வேண்​டும்​’ என்​று அதில்​ கோரி​யிருந்​தனர்​.

தலை​மை நீதிப​தி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிப​தி ஜி.அருள்​முரு​கன்​ அமர்​வில்​ இந்​த வழக்​கு வி​சா​ரணைக்​கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ர​ரான அக்​ரி கிருஷ்ண​மூர்த்​தி தரப்​பில்​ ஆஜரான மூத்​த வழக்​கறிஞர்​ எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், “மதி​யம்​ 2.30 மணிக்​கு ராஜி​னா​மா கடிதம்​ கொடுத்​த நிலை​யில்​ 3.30 மணிக்​கு ராஜி​னா​மாவை பேர​வைத்​ தலை​வர்​ ஏற்​று உடனே அரசிதழில்​ வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அவர்​களது ராஜி​னா​மாவை ஏற்​கும்​ முன்​பு பேர​வைத்​ தலை​வர்​ உரிய வி​சா​ரணை நடத்​த​வில்​லை” என்​றார்​.

நீதி​மன்​றம்​ தலை​யிட முடி​யாது

சட்​டப்​பேர​வைச்​ செயலர்​ தரப்​பில்​ ஆஜரான தமிழக அரசின்​ தலை​மை வழக்​கறிஞர்​ விஜய்​ நா​ராயண்​, “பேர​வைத்​ தலை​வர்​ உரிய வி​தி​களைப்​ பின்​பற்​றியே ராஜி​னா​மா கடிதத்​தை ஏற்​று, அதை முறைப்​படி அறி​வித்​துள்​ளார்​. பேர​வைத்​ தலை​வரின்​ நடவடிக்​கைகளுக்​கு கால வரம்​பு கிடை​யாது. குறிப்​பாக பேர​வைத்​ தலை​வரி்ன்​ நடவடிக்​கை​களில்​ நீதி​மன்​றம்​ தலை​யிட முடி​யாது” என்​றார்​.

இருதரப்​பு வாதங்​களை​யும்​ கேட்​ட நீதிப​தி​கள்​, “சட்டப்பேரவையின்​ எல்​லா நடவடிக்​கை​களி​லும்​ நீதி​மன்​றம்​ தலை​யிட முடி​யாது. எனவே, இந்​த வழக்​கில்​ இடைக்​கால​மாக எந்த உத்​தர​வும்​ பிறப்​பிக்​க முடி​யாது” என மறுப்​பு தெரி​வித்​தனர்​. மேலும்​, இந்​த வழக்​கில்​ சட்​டப்​பேர​வைத்​ தலை​வர்​, பேர​வைச்​ செயலர்​ மற்​றும்​ சம்​பந்​தப்​பட்​ட 4 முன்​னாள்​ எம்​எல்​ஏக்​கள்​ பதில்​ அளிக்​க நோட்​டீஸ்​ பிறப்​பித்​து வி​சா​ரணை​யை ஜூன்​ 29-ம்​ தேதிக்கு தள்​ளி ​வைத்​தனர்​.

பேர​வைத்​ தலை​வரிடம்​ விளக்​கம்​

இதற்​கிடையே, எம்​எல்​ஏ பத​வியை ராஜி​னா​மா செய்​து தவெக​வில்​ இணைந்​த 4 பேரிட​மும்​ விளக்​கம்​ கேட்​டு பேர​வைத்​ தலை​வர்​ கடந்த ஜூன்​ 9-ம்​ தேதி நோட்​டீஸ்​ அனுப்​பி இருந்​தார்​. 4 பேரும்​ சென்​னை தலை​மைச்​ செயல​கத்​தில்​ பேர​வைத்​ தலைவர்​ ஜேசிடி பிரபாகர் முன்​பு நேற்​று ஆஜராகி விளக்​கம்​ அளித்​தனர்.

பின்னர் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை வி​தி​களின்​கீழ்​ 7 நாட்​களுக்​குள்​ விளக்​கம்​ அளிக்​கு​மாறு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்​கும்​ நோட்​டீஸ்​ அனுப்​பப்​பட்​டது. அதன்படி, தற்போது அந்த 4 பேரும்​ நேரில் விளக்​கம்​ அளித்​துள்​ளனர். அவர்கள் அளித்துள்ள விளக்கங்களை முறை​யாக ஆய்​வு செய்வேன். அதன் பிறகு அடுத்​தகட்​ட நடவடிக்​கை பற்​றி அறி​விப்​பேன். இவ்வாறு அவர் கூறினார்.

விராலிமலை உட்பட 6 தொகுதிகள் காலி

சென்னை-பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு, வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், விராலிமலை எம்எல்ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரும் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.

இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பருக்குள் இந்த 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பதவி விலகிய விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.