惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
C
Check Point Blog
J
Java Code Geeks
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
量子位
Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
The Blog of Author Tim Ferriss
小众软件
小众软件
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நம்​மைப் பிடிக்​காதவர்​களுக்கு என்ன செய்தாலும் பிடிக்​கா...
நிலா · 2026-06-25 · via hindutamil

Updated on: 

நடிகர் ரஜினி​ காந்​தின் 173-வது படத்தை கமல் ​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. ஆர்​.மகேந்​திரன் இணை தயாரிப்பு செய்​கிறார். இப்​படத்தை முதலில் சுந்​தர்.சி இயக்​கு​வ​தாக இருந்​தது. கதை பிரச்​சினை காரண​மாக அவர் விலகியதை அடுத்​து, சிபி சக்​கர​வர்த்தி இயக்​கு​வ​தாக அறிவிக்கப்பட்​டது.

அவரும் வில​கியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டி​ராகன்’ படங்களை இயக்​கிய அஸ்​வத் மாரி​முத்து இயக்​கு​வ​தாகச் செய்திகள் வெளி​யாகின. இந்​நிலை​யில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது. இப்​படத்​துக்கு ‘தர்​மன்’ என பெயரிடப்பட்​டுள்​ளது. இதில் சிம்​ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் நடிகர் ரஜினி​காந்த் பேசி​ய​தாவது: பேச அழைப்​ப​தாகச் சொன்​னாலே தயக்​க​மாக இருக்​கிறது. ஏனென்​றால் நான் பேசினாலே ‘பி​ராப்​ளம்​’​தான். எனக்​கும் பிரச்​சினை, மற்றவர்களுக்கும் பிரச்​சினை. ஏதாவது கிளப்​பிக் கொண்டே இருப்​பார்​கள். நான் சும்மா இருந்​தால் இவர் என்ன பேசவே மாட்டேங்​கிறார் என்​பார்​கள். வாயில் கொழுக்​கட்டை வைத்​திருக்கிறா​ரா ? என கிண்​டல் செய்​வார்​கள். சரி என்று பேசி​னால், ‘இப்​போது வந்து பேசு’ என்று சிலரும், ‘இவர் பேசி​யிருக்​கக் கூடாது’ என்று சிலரும் சொல்​கிறார்​கள்.

ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்​து​கொண்​டது நம்​மைப் பிடிக்காதவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் என்ன பேசி​னாலும் பிடிக்​காது. பிடித்​தவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் பேசினாலும் பிடிக்​கும் என நினைப்​பது முட்​டாள்​தனம். ஜாக்கிரதை​யாக இருக்க வேண்​டும். ‘சி​வாஜி’ படத்​துக்கு பிறகு ராஜ் கமல் நிறு​வனத்​துக்கு நான் ஒரு படம் செய்​வ​தாக இருந்​தது. அது தள்​ளிப்​போனது. இப்​போது சேர்ந்​துள்​ளோம்.

இந்​தப் படத்​துக்கு அஸ்​வத் மாரி​முத்து 4-வது இயக்​குநர். முதலில் கே.எஸ்​.ரவி​கு​மார் இயக்​கு​வ​தாக இருந்​தது. பின் சுந்​தர். சி வந்தார். அவருக்கு வேறு படங்​கள் இருந்​த​தால் தாமத​மானது. சிபி சக்​கர​வர்த்​தி​யின் கதை அரு​மை​யாக இருந்​தது. கொஞ்​சம் சென்சிட்​டிவ். அந்​தக் கதைக்கு நிறைய நாள் தேவைப்​படும் என்பதால் பிறகு செய்து கொள்​ளலாம் என்று முடி​வெடுத்​தோம். அப்​போது ​தான் அஸ்​வத் மாரி​முத்து உள்ளே வந்​தார். ‘ரஜினி நான் கதை கேட்க மாட்​டேன். எல்​லாத்​தை​யும் உங்​களிடமே விட்​டு​விட்டேன்’ என்று கமல் கூறி​விட்​டார். எனக்கு டென்​ஷ​னாகி​விட்​டது. எல்லா பொறுப்​பை​யும் என்​னிடம் கொடுத்​து​விட்​டார். ஆனால் நான் தான் அவரை கட்​டாயப்​படுத்தி இந்​தக் கதையைக் கேட்க வைத்​தேன். அஸ்​வத் மாரி​முத்துக்கு பெரிய பொறுப்பு இருக்​கிறது. இந்​தப் படம் நன்​றாக வரும்.

எனக்​கும் கமலுக்​கும் இருக்​கிற நட்பை எவ்​வளவு சொன்​னாலும் அது குறை​வாகத்​தான் இருக்​கும். என் சினிமா கேரியரில் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ வெற்​றியைத் தந்த படம். அதில் முதலில் நான் நடிப்​ப​தாகவே இல்​லை. அதில் நடிக்க இருந்​தது ஜெய்​ கணேஷ் தான். கமல் தான் இதில் ரஜினி நடித்​தால் நன்​றாக இருக்​கும் என்று இயக்​குநரிடம் பரிந்​துரை செய்​தார். கமலால் தான் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ படத்​தில் நடிக்​கும் வாய்ப்பே கிடைத்​தது. இதுபோல கமல் எனக்​குச் செய்த உதவி​களைச் சொல்​லிக் கொண்டே போகலாம். இவ்​வாறு ரஜினி​காந்த் கூறி​னார். பின்னர் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லையே என்று கேட்டதற்கு அவரிடம் தெரிவித்து விட்டேன் என்றார்.