惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
The GitHub Blog
The GitHub Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
I
InfoQ
月光博客
月光博客
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
D
Docker
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவி...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: புற்​று​நோய் மருந்து தயாரிக்​கப் பயன்​படும் அரிய மண் தாதுக்​கள், நிலக்​கரி சாம்​பலில் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதற்​கான வணிக ரீதியி​லான உற்​பத்தி ஆலை என்​எல்சி மூலம் தமிழகத்​தில் விரை​வில் அமைக்​கப்​படும் என்று மத்​திய நிலக்​கரி, சுரங்​கத் துறை அமைச்​சர் ஜி.கிஷன் ரெட்டி தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முந்​தைய கால​கட்​டங்​களில் டெல்​லி​யில் இருந்து அனுப்​பும் நிதி​யில் ஒரு பகுதி மட்​டுமே ஏழைகளைச் சென்​றடைந்​தது. மோடி அரசின் ஜன்​தன் கணக்​கு​கள், ஆதார் மற்​றும் செல்​போன் இணைப்பு மூல​மாக, இடைத் தரகர்​கள், புரோக்​கர்​கள் ஒழிக்​கப்​பட்​டு, கடந்த 12 ஆண்​டு​களில் சுமார் ரூ.34 லட்​சம் கோடி எவ்​வித ஊழலும் இன்றி நேரடி​யாக ஏழைகளின் வங்​கிக் கணக்​குக்​குச் சென்​றடைந்​துள்​ளது.

காங்​கிரஸ் ஆட்​சி​யில் 70 ஆண்​டு​கள் ஜம்மு காஷ்மீரில் ‘பிரிவு 370’ நீட்​டிக்​கப்​பட்​ட​தால், 42 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் உயி​ரிழந்​தனர். ஒரு நாட்​டுக்கு 2 கொடிகள், 2 அரசி​யலமைப்பு என்ற நிலை இருந்​தது. ஆனால், மத்​திய பாஜக அரசு அதை துணிச்​சலாக நீக்​கி, அம்​பேத்​கரின் அரசி​யலமைப்பை அங்கு முழு​மை​யாக அமல்​படுத்​தி​யுள்​ளது.

கரோனா காலத்​தில் உள்​நாட்​டிலேயே தடுப்​பூசிகளைத் தயாரித்​து, 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​தோம். மத்​திய நிலக்​கரி அமைச்​சகம் கடந்த 3 ஆண்​டு​களில் முதல்​முறை​யாக 1 பில்​லியன் டன்​னுக்​கும் அதி​க​மான நிலக்​கரியை உற்​பத்தி செய்து வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளது. இந்​தியா தற்​போது உலகின் 2-வது மிகப்​பெரிய நிலக்​கரி உற்​பத்​தி​யாள​ராக​வும், 5-வது மிகப்​பெரிய நிலக்​கரி இருப்​பைக் கொண்ட நாடாக​வும் திகழ்​கிறது.

செல்​போன், லேப்​டாப், பாது​காப்பு உபகரணங்​கள் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பங்​களுக்கு மிக அவசி​ய​மான லித்​தி​யம், கோபால்ட் போன்ற முக்​கிய தாதுக்​களை உள்​நாட்​டில் கண்​டறிய​வும், உலக நாடு​களில் உள்ள சுரங்​கங்​களைக் கையகப்​படுத்​த​வும் ரூ.34,000 கோடி ஊக்​கத் தொகை​யுடன் திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அர்​ஜென்​டி​னா​வில் ஏற்​கெனவே 5 லித்​தி​யம் சுரங்​கங்​களை இந்​தியா வாங்​கி​யுள்​ளது. ஆஸ்​திரேலி​யா, சிலி போன்ற நாடு​களு​டன் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது.

நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனத்​தின் (என்​எல்​சி) நிலக்​கரி, லிக்​னைட் எரிப்​புக்கு பிறகு கிடைக்​கும் சாம்​பலில் அரிய மண் தாதுக்​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவை புற்​று​நோய் சிகிச்​சைக்கு பயன்​படுத்​தப்​படு​பவை. இதற்​கான பைலட் திட்​டங்​கள் தற்​போது வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அடுத்த ஓராண்​டுக்​குள் இது இறுதி செய்​யப்​பட்​டு, தமிழகத்​தில் வணிக ரீதி​யான உற்​பத்தி ஆலைகள் அமைக்​கப்​படும். இதன்​மூலம் இந்த அரிய மருந்​துகளை இந்​தி​யா​வுக்கு மட்​டுமன்றி உலக நாடு​களுக்​கும் தமிழகத்​தில்​ இருந்​து வழங்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.