























Updated on:
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 10 பெட்டிகளில் தங்க நகைகளும், 3 பெட்டிகளில் வெள்ளி நகைகளும் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வருமானவரித் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。