惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
Martin Fowler
Martin Fowler
T
Tailwind CSS Blog
B
Blog RSS Feed
Vercel News
Vercel News
博客园 - 聂微东
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
C
Check Point Blog
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொல்லார்டின் மகத்தான சாதனை: டி20 வரலாற்றில் அதிக ரன்கள் க...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மகத்தான சாதனையை கைரன் பொல்லார்ட் படைத்துள்ளார். நடுவரிசை வீரராக இந்த உயரத்தை எட்டியதில் இந்தச் சாதனை உண்மையில் தனித்துவமானதே.

கிறிஸ் கெயில் தொடக்க வீரராக அதிக ஓவர்களை எதிர்கொண்டார். ஆனால் நடுவரிசை வீரர்களுக்கு குறைந்த பந்துகளே கிடைக்கும் என்ற அளவில் பொல்லார்ட், கிறிஸ் கெயில் சாதனையை உடைத்தது பெரிய விஷயமே. ஆனாலும், கடந்த 12 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தனது முன்னாள் அணித்தோழர் கிறிஸ் கெயிலை முந்தியதற்காக நகைச்சுவையாக சிறிய மன்னிப்பும் கோரினார் பொல்லார்ட்.

அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருடன் டி20 வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்ற போட்டி சமீப காலமாக நீடித்து வந்தது. ஆனால், தனது டி20 வாழ்க்கையின் 736-வது போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக 81 ரன்களை எட்டியபோது பொல்லார்ட், கெயிலின் சாதனையை முறியடித்தார். சிறப்பாக, அவர் இந்த சாதனை மைல்கல்லை ஒரு சிக்ஸருடன் கடந்தார்.

தற்போது பொல்லார்ட், டி20 கிரிக்கெட்டில் 151.12 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 14,582 ரன்கள் குவித்துள்ளார். நியூயார்க் எம்.ஐ அணிக்காக வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக 2026 மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் அவர் விளாசிய 100 ரன்கள் நாட் அவுட் இன்னிங்ஸ், அவரது நீண்ட டி20 வாழ்க்கையில் இரண்டாவது சதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை குறித்து பொல்லார்ட்

“வெஸ்ட் இண்டீஸில் நாங்கள் நீண்ட காலமாக முன்மாதிரியாக பார்த்த கிறிஸ் கெயிலின் சாதனையை கடந்து வருவது மிகவும் சிறப்பானது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் மகத்தான விஷயங்களை செய்துள்ளார். எனவே மீண்டும் சொல்கிறேன், மன்னிக்கவும் யூனிவர்ஸ் பாஸ்; ஆனால் நாங்கள் இருவருமே அந்த உச்சியில் இருக்கிறோம்.

ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. இருப்பினும், யாரோ ஒருவர் கடினமான வேலையை செய்ய வேண்டும். அனைவரும் தொடக்க வரிசையில் களமிறங்க விரும்பினாலும், ஒரு கிரிக்கெட் போட்டியில் 11 வீரர்கள் ஆடும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது. காலப்போக்கில் என் ரோல் போட்டிகளை வெற்றிகரமாக முடித்து வைக்கும் பினிஷர் ரோலாக இருந்தது. அதை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். அந்த சவாலை ஏற்று அதற்காக பயிற்சி செய்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.

இந்த சாதனைகளை மனதில் வைத்து என் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை இல்லை என்னைப் போன்றவர்களும் கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோரும் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்ததற்காக ஒரு காலத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டனர், கேலி செய்யப்பட்டனர்” என்றார்.

தற்போது 39 வயதாகும் பொல்லார்ட், வீரராகவும் பயிற்சியாளராகவும் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்கிறார். ஐபிஎல் மற்றும் தி ஹண்ட்ரெட் தொடர்களில் அணிகளுடன் பணியாற்றுவதோடு, இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுடனும் பயிற்சி தொடர்பான பொறுப்புகளை வகித்த அனுபவம் அவருக்கு உள்ளது. இந்த புதிய பொறுப்புகள் கிரிக்கெட்டை வேறொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவியதாக பெருமை பொங்கக் கூறினார் பொல்லார்ட்.