



























சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து நேற்று மாலை பெற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “சேப்பாக்கம் தொகுதி மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். புதிதாக பதவி ஏற்கப்போகும் அரசுக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。