惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
The Cloudflare Blog
爱范儿
爱范儿
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
V
V2EX
罗磊的独立博客
V
Visual Studio Blog
A
About on SuperTechFans
IT之家
IT之家
P
Proofpoint News Feed
B
Blog
博客园 - Franky
Blog — PlanetScale
Blog — PlanetScale
Google DeepMind News
Google DeepMind News
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தடுமாறி வரும் முன்னாள் சாம்பியன்களான மும்பை - சிஎஸ்கே இன்...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்​பை​யில் உள்ள வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணி​கள் பலப்​பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்​டத்​தில் காயத்​தில் இருந்து மீண்​டுள்ள ரோஹித் சர்​மா, எம்​.எஸ்​.தோனி களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக கடந்த 2 ஆட்​டங்​களி​லும் மும்பை அணி​யின் தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா களமிறங்​க​வில்​லை. தற்​போது காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர் வலைப்​ப​யிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அவர், களமிறங்க அதிக வாய்ப்​புள்​ளது.

கணுக்​காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக இந்த சீசனில் இன்​னும் ஒரு போட்​டி​யில் கூட விளை​யா​டாத சிஎஸ்கே அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான தோனி, வான்​கடே மைதானத்​தில் தீவிரப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார். காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர் ‘இம்​பாக்ட் பிளேய​ராக’ களமிறக்​கப்​படலாம் எனத் தெரி​கிறது.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 தோல்​வி, 2 வெற்​றிகளு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. ஹாட்​ரிக் தோல்​வி​யுடன் நடப்பு சீசனை தொடங்​கி​யிருந்த சிஎஸ்கே அணி தற்​போது பார்​முக்கு திரும்பி ஒரு நிலைக்கு வந்​து​விட்​ட​தாகத் தோன்​றிய தருணத்​தில், அதிரடி இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தொடைப்​பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார். நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 177.88 ஸ்டிரைக் ரேட்​டுடன் 201 ரன்​கள் எடுத்​திருந்​தார்.

ஆயுஷ் மாத்​ரே​வின் வில​கலால் சிஎஸ்கே அணி மீண்​டும் ஒரு​முறை தங்​களின் பேட்​டிங் வரிசையை பலப்​படுத்த வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. ஆயுஷ் மாத்ரே இடத்​தில் குஜ​ராத் மாநிலத்​தைச் சேர்ந்த விக்​கெட் கீப்​பர் மற்​றும் அதிரடி பேட்​ட​ரான உர்​வில் படேல் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. கடைசி​யாக சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. இந்த தோல்விக்​குப் பிறகு சிஎஸ்கே பேட்​டர்​கள் ஒரு குழு​வாக இணைந்து சிறப்​பாகச் செயல்பட வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளனர்.

ஹைத​ரா​பாத்​துக்கு எதி​ரான போட்​டி​யில் ஒரு கட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு 90 பந்​துகளில் 130 ரன்​கள் மட்​டுமே எடுக்க வேண்​டியது இருந்​தது. கைவசம் 8 விக்​கெட்​டு​கள் இருந்​தும் சிஎஸ்கே தோல்​வியைத் தழு​வியது. மிக​வும் எளி​தாக வெல்ல வேண்​டிய அந்த ஆட்​டத்​தில், மிடில் ஆர்​டர் பேட்​டர்​கள் காட்​டிய மந்​த​மான அணுகு​முறை மற்​றும் ரன் சேர்க்​கத் தயங்​கிய விதம், ஆட்​டத்தை அப்​படியே ஹைத​ரா​பாத் பக்​கம் திருப்​பியது.

சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் சர்​ப​ராஸ் கான் இது​வரை 147 ரன்​கள் சேர்த்து ஓரளவுக்கு நிலைத்​தன்​மை​யுடன் விளை​யாடி வரு​கிறார். இருப்​பினும், அணி​யில் முக்​கிய பேட்​டிங் பொறுப்​பில் இருக்​கும் அவர், சிறந்த முறை​யில் கிடைக்​கும் தொடக்​கத்தை பெரிய இன்​னிங்​ஸாக மாற்​றத் தவறி வரு​வது குறை​யாகவே உள்​ளது. மறு​புறம், கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் இந்த சீசனில் இது​வரை வெறும் 82 ரன்​கள் மட்​டுமே எடுத்து மிக​வும் ஏமாற்​றமளிக்​கும் வகை​யில் விளை​யாடி வரு​கிறார்.

இதுபுறம் இருக்க இன்​றைய ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் மீது அதிக எதிர்​பார்ப்பு நில​வு​கிறது. ஏனெனில் இதே வான்​கடே மைதானத்​தில்​தான் டி20 உலகக்​கோப்​பை​யின் அரை​யிறு​தி​யில் சஞ்சு சாம்​சன் அபார​மாக விளை​யாடி இந்​திய அணியை வெற்​றிப்​பாதைக்கு அழைத்​துச் சென்​றிருந்​தார். அவரிடம் இருந்து மீண்​டும் ஒரு அதிரடி ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தொடர்ச்​சி​யாக அடைந்த 4 தோல்வி​களுக்கு கடந்த ஆட்​டத்​தில் முற்​றுப்​புள்ளி வைத்​திருந்​தது. குஜ​ராத் அணிக்கு எதி​ரான அந்த ஆட்​டத்​தில் திலக் வர்மா 45 பந்​துகளில் 101 ரன்​கள் விளாசி அசத்​தி​யிருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இருப்​பினும் சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டியா ஆகியோரின் தற்​போதைய ஃபார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது. மும்பை அணி​யின் தூண்​களாகக் கருதப்​படும் இவர்​களது பங்​களிப்பு இந்த சீசனில் எதிர்​பார்த்த அளவிற்கு இல்​லை. அதேவேளை​யில் நமன் திர் அந்த இடைவெளியை நிரப்​பும் பொறுப்பை ஏற்​றுச் சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸை வெளிப்​படக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் பவர்ப்ளே ஓவர்​களில் விக்​கெட்​டு​களை வீழ்த்​தத் தடு​மாறி வந்த நிலை​யில், இளம் வேகப்​பந்​து​வீச்​சாளர் அஸ்​வனி குமார், குஜ​ராத் அணிக்கு எதி​ராக 4 விக்​கெட்​டு​களைக் வீழ்த்தி அசத்​தி​னார். இந்த ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வும் விக்​கெட் கைப்​பற்​றி​யிருந்​தார். அவர், விக்கெட் வீழ்த்​தத் தொடங்​கி​யிருப்​பது அணிக்கு பலம் சேர்த்​துள்​ளது.

இங்​கிலாந்து ஆல்​-ர​வுண்​ட​ரான வில் ஜாக்​ஸ், மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் இணைந்​துள்​ளார். அவரது வருகை மும்பை அணி​யின் பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்சு ஆகிய இரண்​டை​யுமே மேலும் வலுப்​படுத்​தும்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.