惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
L
LangChain Blog
The Cloudflare Blog
IT之家
IT之家
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
美团技术团队
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2 கோல்​கள் அடித்து வினிசியஸ் ஜூனியர் அசத்தல்: நாக்​-அவுட்...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

மியாமி: உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் குரூப் சி ஆட்டத்​தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்​கில் ஸ்காட்லாந்து அணியை தோற்​கடித்து நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்னேறியது. பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அசத்​தலாக விளை​யாடி 2 கோல்​களை அடித்​தார்.

இந்த ஆட்​டம் மியாமி​யிலுள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் நேற்று அதி​காலை 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதல் ஆட்​டத்​தில் டிரா, 2-வது ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றிருந்த நிலை​யில் பிரேசில் அணி நேற்று 3-வது ஆட்​டத்​தில் களம்​பு​குந்​தது. பிரேசிலின் அனுபவம் வாய்ந்த வீரர்​கள், ஸ்காட்​லாந்து வீரர்​களின் தடுப்பு அரணை உடைத்​துச் செல்​வ​தில் எளி​தில் வெற்றி பெற்​றனர். ஆட்​டத்​தின் 7-வது நிமிடத்​திலேயே பிரேசில் வீரர் வினிசி​யஸ் ஜூனியர் ஒரு கோலடித்து அணி​யின் கணக்​கைத் தொடங்கி வைத்​தார்.

பிரேசில் வீரர் ராயன் கடத்​திக் கொண்டு வந்த பந்தை எளி​தாக கோலாக மாற்​றி​னார் வினிசி​யஸ் ஜூனியர். இதனால் 1-0 என்ற கணக்​கில் பிரேசில் முன்​னிலை பெற்​றது. 25-வது நிமிடத்​தின்​போது பிரேசில் மற்​றுமொரு கோலை அடித்​தது. ஆனால் அது ஆப்-சைடு என நடு​வ​ரால் அறிவிக்​கப்​பட்​டது. முதல் பாதி​யில் காயங்களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட நேரத்​தில் மற்​றொரு கோலை அடித்​தார் வினிசி​யஸ் ஜூனியர். பிரேசில் வீரர் புரூனோ குய்​மாரஸ் அபார​மாக கிராஸ் செய்த பந்​தை, அற்​புத​மான கோலாக மாற்​றி​னார் வினிசி​யஸ் ஜூனியர்.

இதனால் முதல் பாதி​யில் பிரேசில் 2-0 என்ற கணக்​கில் முன்னிலை பெற்​றது. 2-வது பாதி தொடங்​கியதும் மற்​றொரு கோலை அடித்​தது பிரேசில். இந்த முறை​யும் கோலடிக்க உதவி செய்​தார் புரூனோ குய்​மாரஸ். குய்​மாரஸ் கடத்​திக் கொண்டு கிராஸ் செய்த பந்​தை, ஸ்காட்​லாந்து கோல்​கீப்​பரை ஏமாற்றி மத்தேயஸ் குன்ஹா கோலாக்​கி​னார். இதனால் பிரேசில் 3-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

இறுதி வரை இந்த நிலை நீடிக்​கவே 3-0 என்ற கணக்​கில் பிரேசில் வெற்றி பெற்று 7 புள்​ளி​களு​டன் நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்னேறியது. சாதனை இந்​தப் போட்​டி​யில் 2 கோல்​களை அடித்ததன் மூலம், 24 ஆண்​டு​களுக்​குப் பின்​னர், தனது நாட்​டின் முதல் மூன்று உலகக் கோப்பை ஆட்​டங்​களி​லும் கோல் அடித்த முதல் பிரேசில் வீரர் என்ற பெரு​மையை வினிசி​யஸ் பெற்​றார்.

இதற்கு முன் 2002-ல் ரொனால்டோ நசா​ரியோ, ரிவால்டோ ஆகியோர் இச்​சாதனையைப் படைத்​திருந்​தனர். மேலும், பிரேசில் வீரர்​கள் ஜெய்ர்​சினோ (1970), ரொமாரியோ (1994) ஆகியோ​ரும் ஒரு உலகக் கோப்பை தொடரின் முதல் 3 ஆட்​டங்​களில் கோலடித்து இந்​தச் சாதனையைச் செய்​திருந்​தனர். இதையடுத்து பிரேசில் நாட்​டின் முதல் மூன்று உலகக் கோப்பை ஆட்டங்களிலும் கோல் அடித்த ஐந்​தாவது பிரேசில் வீர​ராக வினிசியஸ் ஜூனியர் திகழ்​கிறார்.