

























இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர், இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவரின் தந்தை முகம்மது துலிப், “எங்கள் மகன் நீட் தேர்வுக்காக நாக்பூர் முதல் தேர்வாகவும், வார்தா மற்றும் பந்தாரா ஆகியவை அடுத்தடுத்த தேர்வாகவும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அனுமதி அட்டையில் தேர்வு மையம் அபு தாபி என குறிப்பிட்டிருந்தது. தேர்வுக்காக எங்கள் மகனை எங்களால் வெளிநாட்டுக்கு அனுப்ப இயலாது. அவனுக்கு பாஸ்போர்ட் கூட இல்லை. அவனை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நேரமும் இல்லை” என தெரிவித்திருந்தார்.
தங்கள் தரப்பில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்ட என்டிஏ, மாணவருக்கு நாக்பூரிலேயே மையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த என்டிஏ இயக்குநர் அபிஷேக் சிங், “பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. மாணவருக்கு நாக்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீட் தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், தேர்வு மைய சர்ச்சைக்கு என்டிஏ உடனடியாக தீர்வு கண்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。