惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
Martin Fowler
Martin Fowler
美团技术团队
量子位
M
MIT News - Artificial intelligence
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
小众软件
小众软件
博客园 - 司徒正美
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
B
Blog RSS Feed
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வைபவ் சூர்யவன்ஷி விளாசுவது காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா?
Ellusamy Karthik · 2026-06-01 · via hindutamil

Updated on: 

கடந்த 1980-களின் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது பதின்ம வயதில் அறிமுகமானார் உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் இப்போது இந்தியாவில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டை கலக்க மற்றொரு டீன் ஏஜ் வீரராக புறப்பட்டுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

நடப்பு ஐபிஎல் சீசனில் இவர் குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும். உலக கிரிக்கெட்டை ஆளும் முன்னணி பந்து வீச்சாளர்களான பும்ரா, கம்மின்ஸ், ரபாடா என யார் பந்து வீசினாலும் அதிரடியாக ஆடி அதை பவுண்டரி பக்கம் பறக்க விடுகிறார் வைபவ்.

‘அந்த பையனுக்கு பயம் இல்ல’ என எல்லோரும் பேசுகிறார்கள். அதோடு யாரது பந்து வீச்சை வைபவ் துவம்சம் செய்தாரோ அவர்களையே தனது ஃபேன் ஆக்கி விடுகிறார். உதாரணம் கம்மின்ஸ். தனது புதிய ஃபேவரைட் வீரர் வைபவ் என சொல்கிறார் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவர் அனைவரையும் ஈர்க்கிறார்.

13 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் அவரை ஒப்பந்தம் செய்தது. அதன் பிறகு நடந்த அற்புதம் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூரை சேர்ந்தவர் வைபவ். இப்போது இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர்பாய்களில் ஒருவராக உருவாகி உள்ளார். அவருக்கு இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் - 16 இன்னிங்ஸில் 776 ரன்கள், அதிக சிக்ஸர்கள் - 72, சிறந்த ஸ்ட்ரைக் ரேட் - 237.31 கொண்டுள்ள வீரராக வைபவ் உள்ளார். இந்த சீசனில் வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட விருதுடன் சில பல விருதுகளை வைபவ் பெறுவார். இந்த சீசன் மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆல் டைம் ரெக்கார்டுகளையும் வைபவ் தகர்த்துள்ளார்.

அதில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என அறியப்பட்ட கிறிஸ் கெயிலின் - 59 சிக்ஸர்கள் (2012 சீசன்) சாதனையை தகர்த்தார். ஆயிரம் ரன்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைந்து எட்டியவர், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த Uncapped வீரர் (சர்வதேச அளவில் சீனியர் கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்) உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளார். இதோடு மிக இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற சாதனையையும் தன்வசமாக்கி உள்ளார்.

இதோடு இந்திய அணிக்காக இளையோர் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அந்த தொடரிலும் அதிக சிக்ஸர்கள் (30 சிக்ஸர்) விளாசிய வீரர் ஆனார்.

இளையோர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய இள வயது வீரர், யு19 ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய இந்தியர், யு19 டெஸ்ட் கிரிக்கெட்டில் 58 பந்துகளில் சதம் விளாசிய இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளார். இதோடு உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்காக எப்போது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி விளாசுவது காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா?

இப்படி ரெக்கார்டுகள் பேசினாலும் வைபவ் சூர்யவன்ஷியின் இயல்பான ஆட்ட முறை குறித்து ஒரு கேள்வி எழுகிறது. இதை வளர்ந்து வரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் எதிர்கொள்வது வழக்கம்தான். அவரது பேட்டிங் முறை காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா? என்பதுதான் அது. களத்தில் வைபவ் விளாசும் பந்துகள் அனைத்தும் சிக்ஸர்களாக மாறுகிறது. சமயங்களில் பந்தை மிஸ் டைம் செய்தால் கூட அது பவுண்டரி லைனை ஒன் பிச்சில் கடக்கிறது. அந்த அளவுக்கு அவரது வலு உள்ளது. அதற்கு தகுந்தது போல அவரது கால் பதமும் உள்ளது.

“அனைவரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுகிறார்கள். அவர் பேட் ஸ்விங் தனித்துவமாக உள்ளது. அதுவே அவரது ஆட்டத்தின் சிறப்பு. அதைவிடவும் வியக்கத்தக்கது என்னவென்றால், தன் கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் உருவாக்குவதற்காக, அவர் தனது முன் காலினை எவ்வளவு அழகாக நகர்த்துகிறார் என்பதுதான். அவர் ஸ்பெஷலான வீரர். அவர் பந்தை விளாசும் விதம் மட்டுமல்ல, அவரது ரிஸ்ட் வொர்க்கும் என்னை கவர்ந்துள்ளது.

மைதானத்தின் அனைத்து திசையிலும் ஆடுவதற்கு சிறந்த ரிஸ்ட் வொர்க் என்பது அவசியம். அதனால் அவர் பந்தை ஸ்லாக் (வெறுமனே ஓங்கி அடிப்பது) செய்யவில்லை என கருதுகிறேன். பந்து வீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்த்தை முன்கூட்டியே கணித்து ஆடுகிறார். அதுதான் மற்றவர்களிடத்தில் இருந்து அவர் வித்தியாசப்படுத்துகிறது. அதோடு அவரால் பவுண்டரி லைனையும் சுலபமாக கிளியர் செய்ய முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென நான் உட்பட அனைவரும் எதிர்பார்க்கிறோம். அது எப்போது நடக்கும் என எனக்கு தெரியாது. டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி கையாள்வது என அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வார். பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி கேள்வி கேட்பார்கள். அதற்கான தீர்வை பேட்ஸ்மேன்கள் கண்டறிய வேண்டும். இந்த சிக்கல் கிரிக்கெட் கரியரின் கடைசி நாள் வரை இருக்கும்.

அவரது இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் அவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். அவருக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க கூடாது” என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதையேதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வல்லுநர்களும் சொல்கின்றனர்.

ஆட்டத்தில் முதிர்ச்சியை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி:

கடந்த 1989-ல் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வாக்கர் யூனிஸ் வீசிய பவுன்சர் சச்சினை தாக்கியது. அதில் அவர் காயமடைந்தார். இருப்பினும் 57 ரன்கள் சேர்த்து அந்த ஆட்டத்தை டிரா செய்தார். அதுதான் சச்சினுக்கு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடராக அமைந்தது. அதுவே தனது முதல் டெஸ்ட் சதத்துக்கான விதியாக அமைந்தது என சச்சினே தெரிவித்துள்ளார்.

இந்த சீசன் முழுவதும் அதிரடியாக ஆடி வைபவ் சூர்யவன்ஷி அசத்தினார். இருப்பினும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தது அவரது மெச்சூர் இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பக்கம் விக்கெட்டுகளை இழந்த போதிலும் களத்தில் இருந்து நம்பிக்கை கொடுத்தார் வைபவ்.

அந்த இன்னிங்ஸில் அவர் எதிர்கொண்ட முதல் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அப்போது ரபாடா வீசிய பந்து வைபவ் சூர்யவன்ஷியின் ஹெல்மெட்டை தாக்கியது. சுமார் 150+ கிலோமீட்டர் வேகத்தில் அந்த பந்து வைபவை தாக்கியது. அதன் பின்னர் தனது இன்னிங்ஸில் வைபவ் வேகத்தை கூட்டினார். அதன் பின்னர் அவர் எதிர்கொண்ட 14 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். அதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

அதற்கு முந்தைய இன்னிங்ஸில் 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். அதிவேக ஐபிஎல் சதம் என்ற சாதனையை தவறவிட்டார். அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ‘நிச்சயம் சதம் என்பது வருங்காலத்தில் வந்து கொண்டுதான் இருக்கும்’ என பாசிட்டிவாக வைபவ் பேசினார். அதே நேர்மறை எண்ணத்துடன் அவர் கிரிக்கெட்டை அணுகினால் அடுத்த 20+ ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டில் அவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டின் வருங்காலமாக இந்த 15 வயது வீரர் உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.