

























Updated on
:
1 min read
காரைக்குடி: “தமிழகத்தில் அமையப்போகும் தவெக அரசை கவிழ்க்கும் தைரியம் திமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் கிடையாது” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக கூட்டணி 3 மாநிலங்களில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது சாதனை. தமிழகம், மேற்கு வங்கத்தில் ஒழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
நாதகவை பொறுத்தவரை ஏற்கெனவே இதேநிலையில் தான் இருந்தது. இதுகுறித்து புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. மாற்றத்துக்காக தவெகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக, அதிமுக இல்லாத ஒரு கட்சி தமிழகத்துக்கு அவசியம் என மக்கள் உணர்ந்து இருக்கின்றனர். தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். குறைந்த இடங்களே தேவைப்படுவதால், தொங்கு சட்டப்பேரவை என்று சொல்ல முடியாது.
தவெக அரசை கவிழ்க்கும் தைரியம் திமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால், இதனை தொங்கு சட்டப்பேரவை என்று சொல்வதைவிட தவெக ஆதரவு சட்டப்பேரவை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உண்டு. பாஜகவின் சரிவு குறித்து நிர்வாகிகள் குழு கூடி ஆலோசனை செய்யும்” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。