惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
D
Docker
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Vercel News
Vercel News
博客园_首页
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
S
SegmentFault 最新的问题
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
V
V2EX
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
IT之家
IT之家
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பூந்தமல்லியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நண்ப...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

பூந்தமல்லி: சென்​னை, போரூர் அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்​கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்​பாக நண்​பர் ஒரு​வரை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர். மற்ற 2 பேரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

சென்​னை, புனித தோமையர்​மலை பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் தேர்ச்சி பெறாத​தால் பொது தேர்வு எழுது​வதற்​காக படித்து வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் காலை வீட்​டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேர​மாகி​யும் வீடு திரும்​பாத​தால், பெற்​றோர் அவரை பல்​வேறு இடங்​களில் தேடி அலைந்​தனர்.

இச்​சூழலில், நேற்று முன்​தினம் இரவு மிக​வும் சோர்​வுடன் வீட்​டுக்கு வந்த சிறுமியை பார்த்து பெற்​றோர் அவரிடம் விசா​ரித்​தனர். அப்​போது சிறுமி, தன்னை 3 இளைஞர்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கிய​தாக தெரி​வித்​துள்​ளார்.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த பெற்​றோர் சிறுமியை மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். இதுகுறித்​து, சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், எஸ்​ஆர்​எம்​சி (போரூர்) அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, முதற் கட்ட விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சிறுமி, சமூக வலை​தளம் மூலம் அறி​முக​மான நண்​ப​ரான முகமது ஆரிப் என்ற இளைஞருக்கு உடல்​நிலை சரி​யில்​லாத​தால் அவரை பார்ப்​ப​தற்​காக குன்​றத்​தூர் பகு​திக்கு சென்​றுள்​ளார்.

பிறகு, முகமது ஆரிப், சிறுமியை அவரது வீட்​டுக்கு அழைத்து செல்​வ​தாக கூறி, தன் மோட்​டார் சைக்​கிளில் சென்​னை, போரூர் அருகே உள்ள கெரு​கம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள காலி இடத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார்.

தொடர்ந்​து, தன் நண்​பர்​கள் இரு​வரை வரவழைத்​துள்​ளார் முகமது ஆரிப். பிறகு 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கி​யுள்​ளனர்.

இவ்​வாறு அந்த விசா​ரணை​யில் தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தரப்​பில் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, குன்​றத்​தூர் அருகே உள்ள காலடிபேட்​டையை சேர்ந்த முகமது ஆரிப்பை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர். மற்ற இரு இளைஞர்​களை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமி வசிக்​கும் பகுதி சென்னை பெருநகர காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும், கூட்டு பாலியல் வன்​கொடுமை சம்​பவம் நடந்த பகுதி ஆவடி காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும், குற்ற சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களின் வசிப்​பிடங்​கள் தாம்​பரம் காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​யிலும் வரு​கிறது. இதனால், இச்​சம்​பவத்​துக்கு 3 காவல் ஆணை​யரக எல்லை பகு​தி​களுக்​கு தொடர்​பு உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.