惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
I
InfoQ
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
罗磊的独立博客
腾讯CDC
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
博客园 - 聂微东
D
DataBreaches.Net
Hugging Face - Blog
Hugging Face - Blog
The Cloudflare Blog
L
LangChain Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த 5 பேரில் இருவர் உடல்கள்...
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

திருச்சி: மத்​திய பிரதேசம் ஜபல்​பூர் பர்கி அணை​யில் படகு மூழ்கி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் உயி​ரிழந்த நிலை​யில் 2 பேரின் உடல்​கள் திருச்சி வந்​தன.

திருச்சி மாவட்​டம் நவல்​பட்டு அண்ணா நகரைச் சேர்ந்​தவர் காம​ராஜ் (39). மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூர் கமேரி​யா​வில் உள்ள மத்​திய அரசின் வெடிமருந்து தொழிற்​சாலை​யில் பணி​யாற்றி வந்​தார். இவரது மனைவி திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் மூலனூரைச் சேர்ந்த கார்​குழலி. இவர்​களது மகன்​கள் புவிதரன் (11), தமிழ்​வேந்​தன் (6).

இதில், தமிழ்​வேந்​தனுக்கு மே 7-ம் தேதி பிறந்த நாள் வரு​கிறது. பிறந்​த​நாளை கொண்​டாடு​வதற்​காக கார்​குழலி​யின் தாய், தந்​தை, சகோ​தரர் பரிமேலழகர், இவரது மனைவி சவு​பாக்​கி​யம், மகன் மயூரன், மகள் இனியா ஆகியோர் ஜபல்​பூர் சென்​றிருந்​தனர். அங்கு ஏப்​.30-ம் தேதி மாலை ஜபல்​பூர் பர்கி அணை​யில் அனை​வரும் படகு சவாரி சென்​ற​போது படகு கவிழ்ந்து விபத்​துக்​கு உள்​ளானது.

இதில் காம​ராஜ், கார்​குழலி, தமிழ்​வேந்​தன், சவு​பாக்​கி​யம், மயூரன் ஆகியோர் நீரில் மூழ்​கினர். பரிமேலழகர், புவிதரன், இனியா ஆகியோர் உயிர் தப்​பினர். கார்​குழலி​யின் பெற்​றோர் படகில் செல்​லாத நிலை​யில் அவர்​களும் உயிர் தப்​பினர். கார்​குழலி, சவு​பாக்​கி​யம் உடல்​கள் மீட்​கப்​பட்ட நிலை​யில், காம​ராஜ், தமிழ்​வேந்​தன், மயூரன் ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எம்​.பி. துரை வைகோ, ஜபல்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் ராகவேந்​திரா சிங்கை தொடர்பு கொண்டு பேசி​யுள்​ளார். இதுபற்றி துரை வைகோ கூறும்​போது, “ஹெலி​காப்​டர் உதவி​யுடன் ராணுவத்​தினர், மாநில பேரிடர் மீட்​புப் படை, காவல் துறை, உள்​ளூர் மீனவர்​கள், மாவட்ட நிர்​வாகம் இணைந்து இரவு பகலாக தேடு​தல் பணி​களில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும், விரை​வில் அனை​வரது உடல்​களை​யும் மீட்டு விடு​வோம் என்​றும் தெரி​வித்​துள்​ளனர்.

முன்​ன​தாக, திருச்​சிக்கு கொண்டு வரப்​படும் கார்​குழலி, சவு​பாக்​கி​யம் ஆகியோர் உடல்​களை அவர​வர் வீடு​களுக்கு அனுப்பி வைக்க ஆம்​புலன்ஸ் வசதி ஏற்​படுத்தி தந்​துள்ள திருச்சி மாவட்ட ஆட்சி​யர் வே.சர​வணன், மத்​திய பிரதேசத்​தில் மீட்​புப் பணி​களில் உதவி புரிந்து வரும் தமிழ​ரான ஐஏஎஸ் அதி​காரி இளை​ய​ராஜா ஆகியோ​ருக்கு நன்​றி” என்​றார். இதனிடையே இரு​வரது உடல்​களும் பாதுகாப்புத் துறை விமானத்​தில் நேற்​றிரவு திருச்சி விமான நிலை​யம் கொண்​டு​வரப்​பட்​டு, உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

தலை​வர்​கள் இரங்​கல்: இந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கும் உறவினர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் உயி​ரிழந்​தது துயரம் தரு​கிறது. நீரில் மூழ்​கிய​போதும் 4 வயது மகனை அணைத்​த​படி மரணித்​துள்ள தாயின் புகைப்​படம் நெஞ்சை உலுக்​கு​கிறது. அனைத்து மாநில அரசுகளும் பாது​காப்பு முன்னேற்​பாடு​களைக் கட்​டா​யம் உறுதி செய்ய வேண்​டும்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: மத்​திய அரசு உடனடி​யாகத் தலை​யிட்​டு, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை மீட்டு தமிழகத்​துக்கு கொண்​டு​வர​வும் காணா​மல் போனவர்​களைக் கண்​டறிவதுடன், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்​கப்பட வேண்​டும்.