惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
腾讯CDC
D
Docker
The Cloudflare Blog
量子位
爱范儿
爱范儿
L
LangChain Blog
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜூன் 18 - 24
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் · 2026-06-17 · via hindutamil

Updated on: 

மகரம்:

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராசிக்கு 02-ல் சஞ்சரிக்கும் ராகு பல வகையிலும் வருமானத்தை பெற்று தரும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மன வருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.

குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பண வரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும்.

திருவோணம்: இந்த வாரம் பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்:

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் வார இறுதியில் வேகம் பிடிக்கும். வீண் மன சஞ்சலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள்.

பண வரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மன வலிமை உண்டாகும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு பண வரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருகு வீண் கவலை அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். நட்சத்திர நாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பண வரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.

சதயம்: இந்த வாரம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண் பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலை தூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.

பரிகாரம்: நவ கிரகத்தில் சனி பகவானை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.

மீனம்:

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்வீர்கள். வருமானம் கூடும். சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.

உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். அரசியல் துறையினருக்கு செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.

உத்திரட்டாதி: இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

ரேவதி: இந்த வாரம் மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக் கவலை உண்டாகும்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வணங்க மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.