惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Threat Research - Cisco Blogs
S
Securelist
H
Heimdal Security Blog
Scott Helme
Scott Helme
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
The Hacker News
The Hacker News
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
Spread Privacy
Spread Privacy
Cyberwarzone
Cyberwarzone
V
Vulnerabilities – Threatpost
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
C
CERT Recently Published Vulnerability Notes
P
Proofpoint News Feed
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
人人都是产品经理
人人都是产品经理
C
Cisco Blogs
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
Engineering at Meta
Engineering at Meta
Project Zero
Project Zero
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
Cisco Talos Blog
Cisco Talos Blog
Last Week in AI
Last Week in AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
O
OpenAI News
P
Proofpoint News Feed
Google Online Security Blog
Google Online Security Blog
Recent Announcements
Recent Announcements
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
U
Unit 42
P
Privacy International News Feed
Google DeepMind News
Google DeepMind News
G
GRAHAM CLULEY
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
TaoSecurity Blog
TaoSecurity Blog
S
Security @ Cisco Blogs
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Jina AI
Jina AI
S
Secure Thoughts
G
Google Developers Blog
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
L
LINUX DO - 最新话题
T
Tenable Blog
Latest news
Latest news
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
​முதல்​வர் பதவியைக் குறிவைத்து இபிஎஸ் காய்நகர்த்தல்கள் - திமுக ஆதரவுடன் அரசியலில் திகில் ஆட்டம் ஆரம்​பம்
குள.சண்முகசுந்தரம் · 2026-05-08 · via hindutamil

Updated on: 

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்​டிலில் அமரமுடி​யாமல் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார் விஜய். எனினும் அறு​திப் பெரும்​பான்​மைக்கு மிக அரு​கில் நிற்​ப​தால் எப்​படி​யும் விஜய் தமிழக முதல்​வ​ரா​வார் என தவெக-​வினர் நம்​பு​கிறார்​கள். இதற்கு நடு​வே, அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்​வந்​திருப்​ப​தாக​வும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்று ஆளுநரை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்​றும் தகவல்​கள் தடதடக்​கின்​றன.

திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் அதி​முக. இந்த இரண்டு கட்​சிகளும் எதிரெ​திர் துருவங்களாக நிற்​பது​தான் இரண்டு கட்​சிகளுக்​குமே நல்​லது. அப்படி இருப்​ப​தால் மட்​டுமே கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த இரண்டு கட்​சிகள் மட்​டுமே மாறி மாறி ஆட்​சி​யைப் பிடித்து வரு​கின்​றன. இதனால் இவர்​களிடம் ஐம்​பது வருடங்​களுக்கு முன்பு ஆட்​சியை பறி​கொடுத்த காங்​கிரஸால் அதற்​குப் பிறகு எழவே முடிய​வில்​லை.

இந்த நிலை​யில்​தான், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக பாஜக தமிழகத்​தில் தலை​தூக்​கியது. ஆனால், அந்​தக் கட்​சி​யாலும் இப்போது வரைக்​கும் திரா​விடக் கட்​சிகள் தயவில்​லாமல் முன்னுக்கு வரமுடிய​வில்​லை. என்​ற​போதும், விஜய்​யின் வரவால் இம்​முறை திரா​விடக் கட்​சிகளின் தலைமை இல்​லாத ஓர் அரசாங்கம் தமிழகத்​தில் அமை​யும் சூழல் உரு​வாகி இருக்​கிறது. காங்​கிரஸ், பாஜ கட்​சிகளால் சாதிக்க முடி​யாத இந்த அதிச​யத்தை சாதித்​துக் காட்டி இருக்​கிறார் விஜய்.

இருந்த போதும் அறு​திப் பெரும்​பான்​மைக்​காக, இப்​போது திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற கட்​சிகளின் தயவை நாடி நிற்​கிறார் விஜய். இது தொடர்​பாக தவெக தரப்​பில் இருந்து கம்​யூனிஸ்ட் தலை​வர்​களிடம் பேசி வரு​கிறார்​கள்.

அதேபோல் பழைய பாசத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவனிடம் நேற்று முன்​தினம் மாலை ஆதவ் அர்​ஜுனா நேரடி​யாகவே பேசி இருக்​கிறார். முதலில் ஆலோ​சித்து முடிவை தெரி​விப்​ப​தாக சொன்ன திரு​மாவளவன், இரவு 8 மணிக்​குமேல் ஆதவ் தரப்​பில் இருந்து தொடர்பு கொண்​ட​போது வேறு​வித​மாக பதில் சொல்லி இருக்​கிறார்.

கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்​புக்கு பிடி​கொடுக்​க​வில்​லை. என்றாலும் விஜய்யை ஆட்​சி​யமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்​சிகளுமே வலி​யுறுத்தி வரு​கின்​றன. அதே​நேரத்​தில், இந்​தக் கட்​சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்​டும் என ஸ்டா​லின் வேண்டுகோள் விடுத்​திருக்​கிறார்.

விசிக, கம்​யூனிஸ்ட்​களின் ஆதர​வுக்கு பங்​கம் வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே பாமக தரப்​புடன் அதி​காரப்பூர்வ பேச்சுவார்த்தை எது​வும் நடத்​த​வில்லை தவெக. இருப்​பினும் இரண்டு தரப்​பிலும் சிலர் நட்பு ரீதி​யில் பேசி​ய​போது, தங்​களுக்கு துணை முதல்​வர் பதவியை தரு​வதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்​டும் என்​றும் பாமக தரப்​பில் கோரிக்கை வைத்​த​தாகச் சொல்​கிறார்​கள். இதற்கு சாத்​தி​யமில்லை என்​ப​தால் மேற்​கொண்டு இதுபற்றி தவெக தரப்​பில் பேச்​சு​வார்த்​தையை தொடர​வில்லை என்​கிறார்​கள்.

இப்​படி​யான சூழலில்​தான், திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்சியமைக்க ஆலோ​சனை நடப்​ப​தாக நேற்று முன்​தினம் ஒரு செய்தி காட்​டுத் தீயாய் கசிந்​தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்​கப்​பட்​டிருந்த போலீஸ் கான்​வாய் விலக்​கப்​பட்​டதும் பல்​வேறு ஊகங்​களுக்கு வழி​வகுத்​தது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர், “இந்​தத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோற்​றதை​விட தனது தந்தை ஸ்டா​லின் தோற்​றதை உதயநிதி ஸ்டா​லி​னால் ஜீரணித்​துக் கொள்ள முடிய​வில்​லை. என்ன விலை கொடுத்​தாவது இதை சரிசெய்ய வேண்​டும் என்​

ப​தில் தீவிர​மாய் இருக்​கிறார் உதயநி​தி. அதி​முக உடன் திமுக கைகோர்க்​கிறது என்ற செய்​தி​யும் உதயநிதி தரப்​பில் இருந்தே கசிந்​திருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுனுடன் நேற்று முன்​தினம் உதயநிதி பேசி​ய​தாக​வும் சொல்கிறார்​கள்.

திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக காலூன்றி இருக்​கும் விஜய், ஆட்​சி​யில் அமர்ந்​தால் திரா​விடக் கட்​சிகளில் ஒன்று நிச்​ச​யம் காணா​மல் போய்​விடும். ஏற்​கெனவே கரைந்து கொண்​டிருக்​கும் அதி​முக அந்த இடத்​துக்கு தள்​ளப்பட நிறையவே வாய்ப்​பிருக்​கிறது. இதையெல்​லாம் உணர்ந்​தே, அதி​முக தரப்​பிலும் ‘தி​முக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி’ என்ற செய்​தி​களை யாரும் மறுக்​க​வில்​லை. மாறாக, “118 எம்​எல்​ஏ-க்​கள் ஆதர​வுடன் ஆளுநரை சந்​திப்​பார் பழனி​சாமி” என திட​மாகச் சொல்லி இருக்​கிறார் புதுச்​சேரி மாநில அதி​முக அமைப்​பாளர் அன்​பழகன்.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு பதில் சொன்ன அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் செம்​மலைகூட, “தி​முக ஆதரவு குறித்து பொதுச் செய​லா​ளர் முடி​வெடுப்​பார்” என்​று​தான் சொல்லி இருக்​கிறார்.

திமுக - அதி​முக ஆட்சி குறித்த செய்​தி​களை டெல்லி பாஜக தலை​மை​யும் ரசிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. அதற்​குக் காரணம், விஜய்க்கு காங்​கிரஸ் ஆதர​வுக் ‘கரம்’ நீட்டி இருப்​பது. விஜய் செல்​வாக்​கில் தமிழகத்​தில் மீண்​டும் காங்​கிரஸ் தலை​தூக்கி விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறது பாஜக. அதன் காரண​மாகவே, அறு​திப் பெரும்​பான்மை எம்​எல்​ஏ-க்​களின் பட்​டியலைக் கேட்டு விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இழுத்​திருக்​கிறார் ஆளுநர்.

விஜய் ஆட்​சிக்கு வராமல் தடுப்​ப​தற்​காக பழனி​சாமியை வெளி​யில் இருந்து ஆதரிக்​கும் முடிவுக்கு திமுக வந்​திருப்​ப​தாக சொல்​பவர்​கள், “இது தொடர்​பாக டெல்​லி​யின் அனு​ம​தி​யோடு அதி​முக சில மூவ்​களை எடுத்து வரு​கிறது. அதன்​படி நேற்றே பழனி​சாமி ஆளுநரை சந்​திப்​ப​தாக இருந்​தது.

ஆனால், விஜய்க்கு சாக்​குப் போக்கு சொல்​லிக் கொண்​டிருந்​த​தால் நேற்று ஆளுநர் - பழனி​சாமி சந்​திப்பு நடக்​க​வில்​லை. புதுச்​சேரி சென்ற பழனி​சாமி அங்கு தங்​கவைக்​கப்​பட்​டுள்ள அதி​முக எம்​எல்​ஏ-க்​களிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். திமுக ஆதரவு குறித்து அப்​போது பேசப்​பட்​ட​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்​து, இன்று திமுக ஆதரவு கடிதத்​துடன் ஆளுநரை பழனி​சாமி சந்​திக்​கக் கூடும் என தெரி​கிறது.

விஜய்க்கு ஆட்​சி​யமைக்க வாய்ப்பு அமை​யாத காரணத்​தால் நாங்கள் பழனி​சாமிக்கு நிபந்​தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்​பில் விளக்​கம் கொடுக்​கப்​படலாம். தங்​களின் இந்த முடி​வால் விஜய்யை ஆட்​சி​யமைக்க முடி​யாமல் தடுத்​து​விட முடி​யும் என நம்​பு​கிறார் உதயநி​தி. அதே​போல், பழனிசாமி​யும் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​று​வ​தால் அதி​முக-வை பிள​வில் இருந்து காப்​பாற்ற முடி​யும் என நினைக்​கிறார்” என்கிறார்​கள்.

யாருமே நினைத்​துக்​கூட பார்க்க முடி​யாத அதி​முக ஆட்சி திமுக ஆதர​வில் அமை​யு​மா... திமுக எதிர்ப்​பிலேயே வளர்ந்த அதி​முக-​வின் எம்​எல்​ஏ-க்​கள் அத்​தனை பேரும் ஒரே​முக​மாய் இதை ஏற்​பார்​களா... அல்​லது திமுக உறவை காரணம் காட்டி அதி​முக-​வில் பிளவு ஏற்​படுமா என்ற கேள்வி​களுக்கு எல்​லாம் விடை தெரி​யும் நாள் வெகுதூரத்​தில் இல்​லை.