


























பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி அளித்த புகார்களின் அடிப்படையில், அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முக்கியமாகச் சிக்கியுள்ளன. இந்த மோசடிகளால் இந்திய வங்கிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.27,337 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, முழு விசாரணையையும் உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் இந்தக் குழுமத்தைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வரும் நாட்களில் குழுமத்தின் முக்கிய இயக்குநர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனில் அம்பானி குழுமத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。