惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
Recent Announcements
Recent Announcements
D
Docker
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
Vercel News
Vercel News
Microsoft Security Blog
Microsoft Security Blog
The GitHub Blog
The GitHub Blog
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
腾讯CDC
B
Blog
博客园_首页
罗磊的独立博客
D
DataBreaches.Net
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்...” - ...
க.ராதாகிருஷ்ணன் · 2026-06-17 · via hindutamil

Updated on: 

கரூர்: “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு மதிமுக ஆற்றிய களப்பணி அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆலை மூடப்பட்டது.

மீண்டும் ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வந்தது. அதற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கக் கூடாது என மனு அளிக்க முதல்வரை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அனுமதி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ்அர்ஜுனா வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது தொடர்பாக முதல்வரை வைகோ சந்திக்கிறார்.

மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜூன் 27-ம் தேதி நடைபெறும் கட்சி பொதுக்குழுவில் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து தலைமை முடிவு செய்யும். தனிப்பட்ட முறையில் நான் தெரிவிக்க முடியாது.

தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும். விவசாயக் கடன் தள்ளுபடி ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் முழுமையாக தள்ளுப்படி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையின்றி நஷ்டம் அடைகின்றனர். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.

பிற கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இயக்க தலைமை மீது அதிருப்தி, கொள்கைக்கு புறம்பாக அவர்கள் செயல்படுவதாக கருத்து ஏற்படும்போது, ராஜினாமா செய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்துகொண்டே அதற்கு எதிராக வாக்களிப்பதைதான் தவறு என கூறமுடியும்.

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் நடக்கவே கூடாது என்பதுதான் நம் கருத்து. ஆனாலும் விரும்பத்தகாத முறையில் நடந்த பாலியல் குற்றங்களில் தொய்வின்றி தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது, எப்ஐஆர் பதிவு செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் நடந்த குற்றங்களில் ஒரு சில குற்றங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் காவல் துறை அவர்களை கண்காணிக்கவேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் உரிமையாளர்கள் பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அதில் அவர்கள் பெயர், முகவரி, குற்றப் பின்னணி குறித்த தகவல்களை இடம்பெற வேண்டும். சிங்கப்பெண் போன்ற திட்டங்கள் வரவேற்கக்கூடியது.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து கரூர் வரை சாலை குறுகலாக இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தப்போது திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இத்திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்து பணிகள் தொடங்க 10 ஆண்டுகளாகிவிடும். பெருகிவரும் போக்குவரத்து காரணமாக 10 ஆண்டுகள் வரை இந்தச் சாலை தாங்காது. எனவே ஏற்கெனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள, தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையையே அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களை சந்திக்க உள்ளேன்” என்று அவர் கூறினார்.