
























நடிகர் விக்ரம் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நாயகியாக ரியா ஷிபு நடிக்கிறார். பிரம்மாண்ட ஆக் ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் மூணாறு சென்றுள்ள நடிகர் விக்ரம் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைச் சந்தித்தார். அவர்கள் விக்ரம் நடித்த திரைப்படங்களில் தங்களுக்குப் பிடித்தது பற்றி அவரிடம் பேசினர்.
பின்னர் அவர்களுடன் இணைந்து ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற, ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ பாடலைச் பாடி மகிழ்ந்தார். அவர்கள் விக்ரமுடன் வீடியோ எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。