

























தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
Updated on:
சிவகங்கை: பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லை. பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டண
உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்வெட்டு இல்லாத சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது.
தமாகா தனது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。