惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
小众软件
小众软件
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
量子位
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
V
Visual Studio Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜம்மு - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

ஸ்ரீநகர்: ஜம்​மு - ஸ்ரீநகர் இடையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஜம்மு காஷ்மீரில் கட்​டப்​பட்ட உலகின் மிக உயர​மான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஜூனில் தொடங்​கி​ வைத்​தார்.

அப்​போது காஷ்மீரின் கத்​ரா​வில் இருந்து ஸ்ரீநகர் வரையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இந்த சூழலில் ஸ்ரீநகர் செல்​வதற்​காக ஜம்மு வந்து சேரும் சுற்​றுலாப் பயணி​கள் அங்​கிருந்து கத்ரா சென்ற பிறகே ரயில் சேவையை பயன்​படுத்த முடி​யும் சூழல் இருந்​தது. இதற்கு தீர்வு காணும் வகை​யில் ஜம்மு தாவி ரயில் நிலை​யத்​தில் இருந்து கத்ரா வரை தண்​ட​வாளம், சிக்​னல் தொழில்​நுட்​பங்​கள் மேம்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஜம்​மு​தா​வி-ஸ்ரீநகர் இடையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஜம்​மு​ தாவி ரயில் நிலையத்​தில் நடந்த விழா​வில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்​துல்​லா, மத்திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: பூஞ்ச்​-ரஜோரி- உரி பகு​தி​களுக்​கும் ரயில் கட்​டமைப்பு விரிவுபடுத்​தப்​படும். இதற்​கான திட்ட அறிக்​கைகள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. விரை​வில் பணி​கள் தொடங்​கப்​படும். கடும் குளிர் காலங்​களி​லும் காஷ்மீரில் ரயில் சேவை எவ்​வித பாதிப்​பும் இன்றி இயக்​கப்​படும். அதற்கு தேவை​யான அனைத்து தொழில்​நுட்ப வசதி​களும் செய்​யப்​பட்டு உள்​ளன.

சரக்கு ரயில் போக்​கு​வரத்​தால் காஷ்மீரில் சிமென்ட் விலை ஒரு மூட்​டைக்கு ரூ.50 குறைந்​திருக்​கிறது. இங்​கிருந்து 20,000 டன் ஆப்​பிள்​கள் ரயில் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். வந்தே பாரத் ரயி​லில் பயணம் செய்த நதீம் அகமது லோகர் கூறும்​போது, “ஜம்​மு- ஸ்ரீநகர் நெடுஞ்​சாலை பனிப்​பொழிவு மற்​றும் நிலச்​சரிவு காரண​மாக அடிக்​கடி மூடப்​படும்.

தற்​போது வந்தே பாரத் ரயி​லால் அனைத்து காலசூழ்​நிலைகளி​லும் எளி​தாக பயணம் மேற்​கொள்​கிறோம். இதற்​காக மத்​திய அரசுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோண்” என்​றார். மற்​றொரு பயணி அனு குப்தா கூறும்​போது, “வந்தே பாரத் ரயி​லில் ஜம்​மு​தா​வி​யில் இருந்து சுமார் 4 மணி நேரத்​தில் ஸ்ரீநகரை சென்​றடைந்​து​விட்​டோம். இதன்​மூலம் நேர​மும் பணமும் மிச்​ச​மாகிறது. காஷ்மீரின் சுற்​றுலா மேம்​படும்” என்று தெரி​வித்​தார்​.