惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
F
Fortinet All Blogs
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
B
Blog
M
MIT News - Artificial intelligence
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப அவசரச...
2026-05-15 · via hindutamil

Updated on

3 min read

சென்னை: 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

இப்படி நடப்பது முதல்முறையல்ல, 2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.

2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை.

2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியானது.

2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது.

2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர்.

2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.

குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது.

இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது.

நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன.

இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன்.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும்.

அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும்.

பிரதமர் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.