惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
J
Java Code Geeks
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog RSS Feed
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து...
2026-04-24 · via hindutamil

Updated on

2 min read

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்​சு​வார்த்தை ஏற்​பாடு செய்​வதற்​கான முயற்​சிகள் குறித்து பாகிஸ்​தான் அமைச்​சரும், பாகிஸ்​தானுக்​கான அமெரிக்கத் தூதரும் இஸ்​லா​மா​பாத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடுத்​தன. ஈரானின் ராணுவ இலக்​கு​களைக் குறி வைத்து தாக்​குதல் நடத்​தின. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதன் காரண​மாக சர்​வ​தேச சந்​தை​யில் எரிபொருள் விலை கடுமை​யாக உயர்ந்​தது.

அதன்​பின் 2 வாரங்​களுக்கு முன்பு போர் நிறுத்த அறி​விப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் இறங்​கியது. அதன்​படி நடை​பெற்ற முதல் கட்ட பேச்​சு​ வார்த்தை கடந்த 11 மற்​றும் 12-ம் தேதி​களில் நடை​பெற்​றது. ஆனால், முடிவு எது​வும் எட்​டப்​ப​டா​மல் தோல்​வியடைந்​தது.

இந்​நிலை​யில் 2 வார கால போர் நிறுத்​தம் கடந்த புதன் கிழமை முடிந்​தது. அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை ஏற்​பாடு செய்​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் இறங்​கியது. இதனால் போர் நிறுத்​தத்​தைக் கால​வரையறை​யின்றி நீட்​டிப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.

இந்​நிலை​யில் அமெரிக்கா - ஈரான் இடையே இந்த வார இறு​தி​யில், 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கான முயற்​சிகள் குறித்து பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சர் மொசின் நக்​வி, பாகிஸ்​தானுக்​கான அமெரிக்க தூதர் நடாலி பேக்​கரை இஸ்​லா​மா​பாத்​தில் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது மேற்​காசிய நில​வரம், 2-ம் கட்ட பேச்​சு​வார்த்​தைக்​குத் தூதரக அளவி​லான முயற்​சிகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அமெரிக்க அதிபர் ட்ரம் அறி​வித்த போர் நிறுத்த நீட்​டிப்​பை, ‘வர​வேற்​கத்​தக்க முன்​னேற்​றம்’ என நக்வி தெரி​வித்​தார். இருதரப்பு இடையே அமை​தி​யான தீர்வு ஏற்பட பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்​றும் ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் அனைத்து முயற்​சிகளும் எடுக்​கின்​றனர். இந்த 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை எப்​போது நடை​பெறும் என தெரிய​வில்லை. எனினும், நல்ல செய்தி வரும். 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை இன்று (வெள்​ளி) நடை​பெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்​துள்​ளார்​.

சீன தூதர் சந்​திப்பு: இதற்கிடையே, பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பை, பாகிஸ்​தானுக்​கான சீன தூதர் ஜியாங் ஜைதாங் நேற்று சந்​தித்​தார். அப்​போது பாகிஸ்​தான் துணை பிரதமரும் மற்​றும் வெளி​யுறவுத் துறை அமைச்​சரு​மான இஷாக் தர் உட்பட பலர் இருந்​தனர். இந்​தச் சந்​திப்பு குறித்து பாகிஸ்​தான் பிரதமர் அலு​வல​கம் விடுத்த அறிக்​கை​யில் கூறிய​தாவது: மேற்கு ஆசியா நில​வரம் குறித்​து, பாகிஸ்​தான் மேற்​கொண்டு வரும் அமைதி முயற்​சிகள் குறித்து சீன தூதர் ஜியாங் கேட்​டறிந்​தார்.

மேற்கு ஆசி​யா​வில் அமை​தியை ஏற்​படுத்த பாகிஸ்​தான் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளை அவர் பாராட்​டி​னார். பாகிஸ்​தான் - சீன உறவு​கள் முன்​னேற்ற பாதை​யில் சென்று கொண்​டிருப்​பது குறித்து பாகிஸ்​தான் பிரதமர் திருப்தி தெரி​வித்​தார். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.