惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Vercel News
Vercel News
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாப...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

சென்னை: ஆழ்​வார்​பேட்டை குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி கோயில் கும்​பாபிஷேக விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் மிக​வும் பழமை​யான குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி கோயில் அமைந்​துள்​ளது. இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள வடபழனி முரு​கன் கோயி​லின் உபகோயி​லான இதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டது.

அதன்​படி, சிற்ப சாத்​திர முறைப்​படி நூதன கொடிமரம் நிறு​வப்​பட்​டு, திருப்​பணி​கள் அனைத்​தும் முழு​மை​யாகப் பூர்த்​தி​யடைந்த நிலை​யில் நேற்று மகா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

முன்​ன​தாக, நேற்று முன்​தினம் காலை யாக​சாலை வளர்க்​கப்​பட்டு கணபதி ஹோமம், நவக்​கிரக ஹோமம், வாஸ்து சாந்​தி, பிர​வேசபலி, யந்​திர சமர்ப்​பணம், விக்​கிரக பிர​திஷ்டை, அஷ்டபந்​தனம் சாற்​று​தல் ஆகிய வைபவங்​கள் நடை​பெற்​றன.

மாலை​யில் அங்​கு​ரார்ப்​ பணம் எனும் முளைப்​பாரி​யிடு​தல், ரக் ஷாபந்​தனம், முதற்​காலயாக​சாலை பூஜைகள், பூர்​ணா ஹூ​தி, தீபா​ராதனை ஆகியவை நடை​பெற்​றன.

<div class="paragraphs"><p>சென்னை ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.</p></div>

சென்னை ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கும்​பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு இரண்​டாம் கால யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. காலை 9 மணிக்கு பூர்​ணாஹூதி நிறைவடைந்​து, அதனைத் தொடர்ந்து யாத்​ரா​தானம், கடப்​புறப்​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றன.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாக, காலை 10 மணிக்கு விமான கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. அதனைத் தொடர்ந்​து, மூல​வர் குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி, பரி​வார தெய்​வங்​களான விநாயகர், தட்​சிணா​மூர்த்​தி, சிவலிங்​கம், அம்​பாள், சண்​டிகேஸ்​வரர் சந்​நி​தி​களுக்கு அஷ்டபந்தன மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டது.

வடபழனி முரு​கன் கோயில் தலைமை சிவாச்​சா​ரி​யார் செல்​வம் தண்​ட​பாணி தலை​மை​யில் சிவாச்​சா​ரி​யார்​கள் இந்த கும்​பாபிஷேகத்தை நடத்தி வைத்​தனர்.

இந்த விழா​வில் வடபழனி முரு​கன் கோயில் தக்​கார் எல்​. ஆ​தி​மூலம், துணை ஆணை​யர் லட்​சுமி, சென்னை முழு​வ​தி​லு மிருந்து திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

அவர்​கள் மீது புனித கும்ப நீர் தெளிக்​கப்​பட்​டு, பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்​டன. தொடர்ந்​து, நேற்று மாலை மூல​வருக்கு விசேஷ அலங்​காரங்​கள்​ செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்பட்டது.