惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
C
Check Point Blog
月光博客
月光博客
Y
Y Combinator Blog
I
InfoQ
B
Blog RSS Feed
P
Proofpoint News Feed
腾讯CDC
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
B
Blog
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
MongoDB | Blog
MongoDB | Blog
Recent Announcements
Recent Announcements
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக நிதிநிலையை மேம்படுத்த, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசி...
மு.சக்தி · 2026-06-17 · via hindutamil

Updated on: 

சென்னை: “தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல், இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா?” என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என மொத்தக் கடன் குறைந்தது ரூ.13.18 லட்சம் கோடியாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 % வட்டிக்கு செலவிடப்படுவதாகவும் அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் எந்த வகையிலும் வியப்பளிக்கவில்லை.

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் நிதி நிலை மோசமடைந்து வந்தது குறித்தும், கடன் தொகை அதிகரித்து வருவது குறித்தும் பாமக கடந்த ஐந்தாண்டுகளில் அறிக்கைகள், நிழல் நிதி நிலை அறிக்கைகள், உத்தேசப் பொருளாதார ஆய்வறிக்கைகள் ஆகியவற்றில் தெரிவித்து வந்த தரவுகள் தான் இப்போது அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் நிதி நிலைச் சீரழிவுகள் குறித்து கடந்த காலங்களில் பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசுகள் பொறுப்பேற்கும் போது நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதை மிகவும் ஆரோக்கியமானப் போக்காகவே பாமக கருதுகிறது. நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ? என்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையை பாமக வரவேற்கிறது. ஆனால், இதை தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், கடன் சுமையை குறைப்பதற்குமான அடித்தளமாகத் தான் புதிய அரசு பயன்படுத்த வேண்டுமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு முக்கிய உண்மைகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை; மாறாக குறைந்திருக்கிறது என்பதும், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளின் மதிப்பு 61.70% ஆக அதிகரித்துள்ளது; மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இது 50 % க்கும் குறைவாகவே உள்ளது என்பதும் ஆகும்.

இந்த தரவுகள் உண்மை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த நிதி நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கான செயல் திட்டம், காலவரையறை உள்ளிட்டவற்றை தவெக அரசு அறிவிக்க வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்கு கடந்த ஐந்தாண்டுகளில் 1 % அதிகரித்திருக்கிறது; கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் குறையாமல் நிலையாக இருக்கிறது; ஆனால், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 5.93 விழுக்காட்டில் இருந்து 5.45 % ஆக குறைந்திருக்கிறது. இதற்கான காரணங்களில் முதன்மையானது சரக்கு மற்றும் சேவை வரிகள் சரியாக வசூலிக்கப்படாதது தான். தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி கணக்கு தாக்கல் செய்யும் தொழில், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 11.40 லட்சமாக இருக்கும் நிலையில், ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகள் வரை, இவற்றில் 28.50 % அதாவது 3.25 லட்சம் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை; மேலும் 17 %, அதாவது 1.94 லட்சம் நிறுவனங்கள் தலா ரூ.1,000-க்கும் குறைவாகவே வரி செலுத்தியுள்ளன. இப்போதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் தொடர்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த நிலையை புதிய அரசு எவ்வாறு மாற்றப் போகிறது ?

வருவாயைப் பெருக்குவதை விட பெரும் சவால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது தான். 2026- 27ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் படி அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.3 லட்சத்து 44,575 கோடி ஆகும். அதில் ஊதியம் ரூ.94,377.56 கோடி, ஓய்வூதியம் ரூ.45,323.17 கோடி, கடனுக்கான வட்டி ரூ.78,677.29 கோடி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகள் மற்றும் ரூ.18,735.42 கோடி பிற செலவுகளை சேர்த்தாலே ரூ.2 லட்சத்து 37,113.44 கோடி வருகிறது.

இதில் ஒரு ரூபாயைக் கூட குறைக்க முடியாது. இதுதவிர இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவு ரூ. ஒரு லட்சத்து 56,108.41 கோடியை சேர்த்தால் அரசின் வருவாய் செலவுகள் மட்டுமே ரூ.3 லட்சத்து 93,221.85 கோடியாக அதிகரிக்கும். இதை சமாளிக்கவே ரூ.48,646.54 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். மூலதன செலவு ரூ.73,270 கோடியையும் சேர்த்தால் நிதிப் பற்றாக்குறை ரூ.ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 916 கோடியாக உயரக்கூடும்.

ஆனால், திமுக அரசு சில செலவுகளை குறைத்து, வரவுகளை உயர்த்திக் காட்டியிருப்பதாக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.33 லட்சம் கோடியாகவும் இருக்கும் என புதிய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கவும், ஏற்கனவே வாங்கிய கடனில் ரூ.60,413.42 கோடியை அடைக்கவும் 2026- 27ம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவை தவிர தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற குறைந்தது ரூ 1 லட்சம் கோடியாவது தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா ? இந்த நிலைமையை தவெக அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது ? மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது ? என்பதற்கான செயல் திட்டத்தை தவெக அரசு அறிவிக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.