









Updated on:
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் பலர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் தேசியவாத மக்கள் கட்சியில் இணைந்து விட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி நேற்று சந்தித்தார். அப்போது வேறு கட்சியில் இணைந்த 20 திரிணமூல் எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி அவர் மனு அளித்தார். இது குறித்து அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: திரிணமூல் எம்.பி.க்கள் 20 பேர் வேறு கட்சியில் சேர்ந்ததாக கூறினர். யாருமே அந்த கட்சியின் பெயரை கேள்விப்பட்டதில்லை.
அந்த கட்சியில் சேர்ந்தவர்களே அதன் பெயரை கேள்விபட்டதில்லை. அரசியல்சான விதிமுறைகள் படி, மக்கள் பிரதிநிதி ஒருவர் கட்சியை விட்டு தானாக வெளியேறினால், அவர் தனது உறுப்பினர் தகுதியை இழக்கிறார். ஒரு கட்சியின் சின்னத்தில் வெற்றி பெற்று, மற்ற கட்சியில் சேர்ந்தால், அவரது உறுப்பினர் பதவிரத்தாக வேண்டும்.
அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்யும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。