ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
2026-04-30
·
via hindutamil
வாஷிங்டன்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுடனான நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. ஈரானின் கடற்படை கடலுக்கடியில் உள்ளது; அவர்களின் விமானப்படை மற்றும் ரேடார் கருவிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானின் தலைவர்கள் இப்போது நம்முடன் இல்லை. தற்போதைய பொருளாதார முடக்கம் மிகவும் வலுவாக உள்ளது. இனி நிலைமை ஈரானுக்கு மோசமாகத்தான் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் அரசியல் பேரார்வத்தை ‘அணுகுவது’ எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。