

























ஹார்சென்ஸ்: டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் லக் ஷயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் எஃப்ரைம் ஸ்டீபனையும், ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-6 என்ற செட் கணக்கில் ஸ்ரே தண்டையும் தோற்கடித்தனர். ஹெச்.எஸ்.பிரனாய் 21-11, 21-17 என்ற செட் கணக்கில் ரிஷி ஹோன்டா பூபதியை வீழ்த்தினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。