
























கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தி படமான ‘ரஃப்தார்’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ள ‘ரஃப் தார்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இதில் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா, ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவின் மனைவியும் நடிகையுமான பத்ரலேகா, தனது காம்பா ஃபிலிம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படம் ஜூலை 24-ல் வெளியாக இருந்த நிலையில் இப்போது, அக்.16-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேராசை, பணம், அதிகாரம் ஆகியவற்றின் பின்னணியில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல், லட்சியப் போராட்டத்தை விவரிக்கும் டிராமாவான இப்படம் கல்வித்துறையின் பிரச்சினையை பேசுகிறது என்கிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。