惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
罗磊的独立博客
博客园 - 聂微东
雷峰网
雷峰网
量子位
美团技术团队
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
大猫的无限游戏
大猫的无限游戏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
The Cloudflare Blog
爱范儿
爱范儿
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தூர்வார வேண்டும்: பழனிசாமி வல...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

சென்னை: மேட்​டூர் அணை​யில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்​ணீர் திறப்​ப​தற்கு முன்​பாக டெல்டா மாவட்​டங்​களில் உள்ள அனைத்து நீர்​நிலைகளில் தூர்வார வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக ஆட்​சி​யில், ஒவ்​வொரு ஆண்​டும் மேட்​டூர் அணை​யில் இருந்து பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்​து​விடும் ஜூன் 12-ம் தேதிக்கு முன்​பே, டெல்டா மாவட்​டங்​கள் முழு​வதும் உள்ள பாசன வாய்க்​கால்​கள், ஆறுகள் போன்ற நீர்​நிலைகள் அனைத்​தும் தூர்வாரப்​பட்டு பாசனத்​துக்கு தண்​ணீர் தங்கு தடை​யின்றி சென்​றது.

மழைக் காலங்​களில் நீர் நிலைகளில் தடுப்​பின்றி வெள்ள நீர் வேக​மாக வடிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. குறிப்​பாக, 2011-ம் ஆண்டு கால​கட்​டத்​தில் டெல்டா மாவட்​டங்​களில் ‘நெய்​வேலி காட்​டா​ மணக்​கு’ என்ற செடி நீர் நிலைகள் முழு​வதும் ஆக்​கிரமித்து பாசனத்​துக்கு, கடைமடை பகு​தி​களுக்கு தண்​ணீர் செல்​வ​தில் பெரிதும் பாதிப்பை ஏற்​படுத்​தி​யது.

அவற்றை முழு​மை​யாக அகற்​றி, இன்​று​வரை நெய்​வேலி காட்​டா​மணக்கு என்ற செடி டெல்டா மாவட்​டங்​களில் எங்​கும் இல்லை என்ற நிலையை உரு​வாக்​கினோம்.

டெல்டா மாவட்​டங்​களில் தூர்வாரும் பணி​யை​யும், ஆறுகளின் கட்​டமைப்​புப் பணி​களை​யும், அந்​தந்த பகு​தி​களில் உள்ள பதிவு பெற்ற விவ​சாய சங்​கங்​களுக்கே வழங்​கி, விவ​சா​யிகளே தூர்வாரும் பணியை மேற்​கொண்​ட​தால், இப்​பணி 100 சதவீதம் முறை​யாக நடை​பெற்றது.

கடந்த ஆட்​சி​யில் டெல்டா மாவட்​டங்​களில் முறை​யாக தூர்வாரப்​பட​வில்​லை. இந்த ஆண்​டும் தேர்​தல் நடை​பெற்​றுக்கொண்​டிருக்​கும்​போதே, டெல்டா மாவட்​டங்​களில் ‘சி’ மற்​றும் ‘டி’ வாய்க்​கால்​கள் அவசர கோலத்​தில் தூர்வாரப்​பட்​டன.

இதனால் ஜூன் மாதம் மேட்​டூர் அணை​யில் திறந்​து​விடப்​படும் தண்​ணீர் முழு​மை​யாக டெல்டா மாவட்​டங்​களின் கடைமடை பகு​தி​களில் சென்​றடை​யாமல் விவ​சாயப் பணி​கள் பாதிக்​கும் சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, புதி​தாகப் பொறுப்​பேற்​றுள்ள அரசு, டெல்டா மாவட்​டங்​களில் அனைத்து நீர் நிலைகளி​லும் தேங்​கிக் கிடக்​கும் ஆகா​யத் தாமரையை அகற்​றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து திறந்​து​விடப்​படும் தண்​ணீர் கடைமடை பகு​திவரை முழு​மை​யாகச் சென்​றடைவதை உறு​தி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.