惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
L
LangChain Blog
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
P
Proofpoint News Feed
博客园_首页
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது: முதல்முறையாக ...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று காலை 9.30 மணிக்கு வெளி​யிடப்​படு​கிறது. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூலம் முடிவு​களை அறிந்​து​கொள்ள வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. 3,412 மையங்​களில் 8.27 லட்​சம் மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர்.

150-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் கடந்த ஏப்.6 முதல் ஏப்​.20-ம் தேதி வரை நடை​பெற்​றது. தொடர்ந்​து, தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை தீவிர​மாக மேற்​கொண்​டது.

இதற்​கிடையே, தமிழகத்​தில் புதிய அரசு அமைவ​தில் தாமதம் ஏற்​படு​வ​தா​லும், தேர்வு முடிவு​களுக்கு ஒப்​புதல் பெறாத​தா​லும், ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 8-ம் தேதி தேர்வு முடிவு வெளி​யாகுமா என்ற சந்​தேகம் எழுந்​தது.

நிர்​வாக காரணங்​களால் முடிவு​களை வெளி​யிடும் தேதி தள்​ளிப்​போகலாம் என்​றும் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் திட்​ட​மிட்​டபடி இன்று வெளி​யிடப்பட உள்​ளது.

இதுகுறித்து அரசுத் தேர்​வு​கள் இயக்​குநர் க.சசிகலா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை நுங்​கம்​பாக்​கம் பேராசிரியர் அன்​பழகன் கல்வி வளாகத்​தில் உள்ள மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறு​வனக் கூட்​டரங்​கில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் மே 8-ம் தேதி (இன்​று) காலை 9.30 மணிக்கு வெளி​யிடப்​படு​கிறது.

மாணவர்​கள் www.tnresults.nic.in மற்​றும் www.dge.tn.gov.in மற்​றும் results.digilocker.gov.in ஆகிய இணை​யதளங்​களில் தங்​களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய​வற்றை பதிவு செய்து தேர்வு முடிவு​களை அறிய​லாம்.

பள்ளி மாணவர்​கள் உறு​தி​மொழிப் படிவத்​தில் குறிப்​பிட்ட செல்​போன் எண் மற்​றும் தனித் தேர்​வர்​கள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பித்​த​போது வழங்​கிய செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி மூல​மாக​வும் தேர்வு முடிவு​கள் அனுப்​பப்​படும்.

மேலும், இந்த ஆண்டு முதல்​முறை​யாக தமிழ்​நாடு மின்​ஆளுமை முகமை மூலம் வாட்​ஸ்​அப் செயலி​யில் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்​ளும் வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி,78452 52525 என்ற எண்​ணுக்கு வாட்​ஸ்​அப்​பில் ‘Hi’ என்று குறுந்​தகவல் அனுப்​பி, அடுத்​தடுத்து துறை பெயர், தேர்​வர்​களின் வகுப்​பு, தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய​வற்றை பதி​விட்​டு, தேர்வு முடிவு​களை அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்​ளலாம். மாணவர்​கள் தேர்வு முடிவு​களை தைரி​யம், நம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்ள வேண்​டும்.

தேர்ச்சி அடை​யாத மாணவர்​களுக்கு விரை​வில் துணைத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்​கப்​படும். பள்​ளி​கள் மூலம் சிறப்பு பயிற்​சி​யும் வழங்​கப்​படும். பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களுக்கு பொறுமை​யுட​னும், அக்​கறை​யுட​னும், புரிதலுட​னும்​ துணைநிற்​க வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.