惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
M
MIT News - Artificial intelligence
罗磊的独立博客
博客园 - 【当耐特】
A
About on SuperTechFans
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
The Cloudflare Blog
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தால் என்ன தவறு? - ஆ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

ஆர்.எஸ்.பாரதி |கோப்புப் படம்

Updated on: 

சென்னை: “நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பி உள்ளார்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

பகைவரை அடையாளம் காட்டிய தேர்தல் இதுதொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: யார் நண்பர்கள், பகைவர்கள்? என்பதை எங்களுக்கு, இந்த தேர்தல் அடையாளம் காட்டி உள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார்? என்பதை அவர்களுக்கு காட்டுவோம்.

அதிமுக என்பது ஏதோ தீண்டத்தகாத சக்தி போல் கம்யூனிஸ்டுட்கள் பேசுகிறார்கள். ஏன், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ராஜ்ய சபா எம்.பி. பதவியை வாங்கவில்லையா?. எம்எல்ஏவாக வெற்றி பெறவில்லையா?. அப்படியே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?.

மேலும் 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து சிபிஎம், சிபிஐ என்று பிரிந்தது. எலியும், பூனையுமாக இருந்த அவர்கள் ஒருமித்த கருத்துடன் போகவில்லையா?. அதிமுக எங்களை விட்டுபிரிந்து 54 ஆண்டுகளாகி விட்டது. அதிமுக என்பது எங்களுடைய பங்காளி. பகையாளி என்பது கொள்கைரீதியாக பாஜகதான்.

தற்போது சட்டப்பேரவையில் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக ஒரே வரிசையில் தானே அமர்ந்துள்ளோம். இப்படி உட்கார வைத்து, காலம் கனிய வைத்துவிட்டது. 1977-ல் இருந்து அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சியாக, நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

மதிமுகவும் விலகக் கூடும்: தற்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கும் தொண்டர்கள் 2 கட்சிகளும் உள்ளே இணைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். இந்த இணைப்புக்கு காரணம் திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்தான். திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவும் விலகல் முடிவைத்தான் எடுக்கப் போகிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஒரு அதிசயம் நடந்துள்ளதால், பலவீனமானவர்கள் பலியாகி விட்டார்கள். உறுதியாக இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.