惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
D
DataBreaches.Net
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிலரின் சுயநலத்​தால் சுயத்தை தொலைக்​கும் அதிமுக
2026-05-17 · via hindutamil
குள.சண்முகசுந்தரம்

Updated on

2 min read

ஒட்​டுமொத்த கட்​சி​யின் நலனை​விட ஒரு சிலரின் சுயநலனே பிர​தான​மாக பார்க்​கப்​ பட்​ட​தால், பொன்​விழா கண்ட அதி​முக மீண்​டும் ஒரு அக்​னிப் பரீட்​சைக்கு ஆளாகி இருக்கிறது.

அதி​முக என்ற கட்​சியை தொடங்க வேண்​டும் என்று முதலில் எம்​ஜிஆர் நினைக்​க​வில்​லை. அவரது ரசிகர்​கள் தான் திமுக-​வில் அவருக்கு தரப்​பட்ட நெருக்​கடிகளை சகித்​துக் கொள்​ள​முடி​யாமல் மதுரை​யில் தாமரைக் கொடியை ஏற்றி அதி​முக-வுக்கு அடித்​தளம் போட்​டார்​கள். ரசிகர்​களின் வேண்​டு​கோளை ஏற்று 1972-ம் ஆண்டு அக்​டோபரில் அதி​முக என்ற கட்​சியை எம்​ஜிஆர் தொடங்​கி​னார். இன்​றைக்கு விஜய் ரசிகர்​கள் மீது எப்​படி ‘தற்​குறிகள்’ முத்​திரை குத்​துகிறார்​களோ அதே​போல் அன்​றைக்கு எம்​ஜிஆர் ரசிகர்​களை, ‘விசிலடிச்​சான் குஞ்​சுகள்’ என விமர்​சித்​தது திமுக.

எம்​ஜிஆர் ரசிகர் மன்​றங்​கள் திமுக-வுக்​குள்​ளேயே உட் கிளை​களாக இருந்​த​தால் அப்​போது திமுக மேடைகளுக்கு பதில் மேடை போட்டு உடனுக்​குடன் பதிலடி கொடுத்​தார்​கள். “ரத்​தத்​தின் ரத்​தமே” என்று எம்​ஜிஆர் சொன்​ன​போதெல்​லாம், ஏதோ... தாங்​களே கட்​சிக்கு ரத்​தம் கொடுத்​ததைப் போன்று உணர்ந்​தார்​கள். இதனால் ஏகப்​பட்ட நெருக்​கடிகளை​யும் எதிர்​கொண்​டார்​கள் எம்​ஜிஆர் ரசிகர்​கள்.

மிக​வும் தீவிர​மாக இருந்த அவர்​களில் சிலரை ஜெயி​லில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்​பவங்​களும் நடந்​தன. இதனால், திமுக-​வும் அதி​முக-​வும் என்​றைக்​குமே சந்​திக்க முடி​யாத எதிரெ​திர் துரு​வங்​களாக மாறிப் போயின. அதி​முக-​வினரும் திமுக-​வினரும் பொது இடங்​களில் கைகுலுக்​கக் கூட தயங்​கி​னார்​கள்.

இத்​தகையை நிலைப்​பாடு தான் அதி​முக-வை முதல் தேர்​தலிலேயே ஆட்​சிக் கட்​டிலிலும் அமர​வைத்​தது. அதி​முக-வுக்கு ஜெயலலிதா தலை​மையேற்ற பிறகு இந்​தப் போக்கு இன்​னும் தீவிர​மானது. ‘தீய சக்​தி’ என்ற வார்த்தை பிரயோகத்தை ஜெயலலிதா சர்வ சாதா​ரண​மாய் உபயோகித்​தார்.

திமுக-​வினருடன் அதி​முக-​வினர் யாராவது தொடர்​பில் இருப்​ப​தாக தெரிய​வந்​தாலே அவர்​களை கட்​சி​யை​விட்டு கட்​டம் கட்​டி​னார். மதுரை​யில் ஒரு திரு​மணத்​தில் மு.க.அழகிரி​யும் செல்​லூர் ராஜு​வும் ஒன்​றாக கலந்து கொண்​ட​தாக வெளி​யான ஒரு போட்​டோவை ஆதா​ர​மாக வைத்தே ராஜுவை அமைச்​சர் பதவியி​லிருந்தே தூக்​கிய​வர் ஜெயலலி​தா.

திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கு​மான ‘உறவு’ இப்​படி இருக்​கை​யில், இந்​தத் தேர்​தலில் அதி​முக-வை ஜெயிக்க வைக்க முடி​யாத பழனி​சாமி, திமுக தயவில் அரியணை ஏற ஆசைப்​பட்​ட​தாகச் சொல்லி இன்​னொரு பிளவுக்கு பிள்​ளை​யார் சுழி போட்​டிருக்​கிறார்​கள் சி.​வி.சண்​முகம் எஸ்​.பி.வேலுமணி தலை​மையி​லான அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள்.

கட்​சி​யை​விட்டு பிரிந்து போனவர்​களை எல்​லாம் ஒன்று சேர்த்து அதி​முக-வை பலப்​படுத்த வேண்​டும் என்று இவர்​கள் வலி​யுறுத்தி வந்​ததை உதாசீனப்​படுத்​தி​னார் பழனி​சாமி. தேர்​தல் முடிவு​கள் எதிர்​மறை​யாக வந்​தால் இவை அனைத்​தும் அவருக்கு எதி​ரான ஆயுதங்​களாக திரும்​பும், அதி​முக இன்​னொரு பிளவைச் சந்​திக்​கும் என்று அப்​போதே பேச்​சுகள் எழுந்​தன. அது​தான் இப்​போது நடந்​திருக்​கிறது.

அதேசம​யம், 2021 தேர்​தலில் தோற்​றாலும் அதி​முக-வை வலு​வான எதிர்க்​கட்சி நிலைக்கு கொண்டு வந்த பழனி​சாமி, கடந்த 5 ஆண்​டு​களில் கட்​சியை கட்​டுக்​கோப்​பாகவே வழிநடத்​தி​னார். உள்​ளடி வேலை பார்த்து கட்​சியை பாஜக உடைத்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே டெல்லி இழுத்த இழு​வைக்​கெல்​லாம் சென்​றவர், பலமான கூட்​ட​ணி​யைக் கட்​டமைத்​ததுடன் தனி ஆளாக தமிழகம் முழு​மைக்​கும் பிரச்​சா​ரம் செய்​தார். அதனால் தான் விஜய் அலை​யிலும் அதி​முக-வுக்கு கவுர​மான தோல்வி கிடைத்​திருக்​கிறது. அதனால் தான் கட்​சி​யும் இந்த நிமிடம் வரை அவர் சொல்​லுக்கு கட்​டுப்​பட்டு நிற்​கிறது.

ஆனால், இந்​தத் தோல்​வியி​லிருந்து தன்னை தலைநிமிர்த்​திக் கொள்​வதற்​காக திமுக-வுட​னும் கைகோக்க துணிந்த பழனி​சாமி, அதற்​குப் பிறகு அதி​முக என்ற கட்சி என்​னாகும் என்று சிறிதும் சிந்​திக்​க​வில்​லை. ஆட்​சிக்கு வந்​து​விட்​டால் அனைத்​தை​யும் சமாளித்​து​விடலாம் என வழக்​கம் போல் அவர் கணக்​குப் போட்​டார். முதலில் இதற்கு மூச்​சு​வி​டா​மல் இருந்த முன்​னாள் அமைச்​சர்​கள், பழனி​சாமி​யின் முயற்சி பலனளிக்​காது என்று தெரிந்து போனதும், தவெக ஆதரவு நிலைப்​பாட்​டுக்கு மாறி​னார்​கள்.

பழனி​சாமி திமுக-வுடன் கைகோக்க நினைக்​கும் போது நாம் தவெக-வுக்கு ஆதர​வளித்து அதி​காரத்​தில் பங்​கெடுப்​ப​தில் என்ன தவறு என்று சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி போன்​றவர்​களும் சுயநல​மாகவே யோசித்​தார்​கள். அதை வெளிப்​படை​யாகச் சொல்​லாமல், “அம்​மா​வால் தீய சக்தி என்று சொல்​லப்​பட்ட திமுக-வுடன் கைகோக்க பழனி​சாமி திட்​ட​மிட்​டார். அதை ஏற்​க​முடி​யாமல் நாங்​கள் இந்த முடிவை எடுத்​தோம்” என்​கிறார்​கள். நான்கு நாட்​கள் பழனி​சாமி ஏற்​பாட்​டில் புதுச்​சேரி​யில் தங்கி ‘சிந்​தித்த’ பிறகு தான் இவர்​களுக்கு இந்​தத் ‘தெளிவு’ பிறந்​திருக்​கும் போலிருக்​கிறது.

தொடர் தோல்வி​களால் அதி​முக தொண்​டர்​கள் துவண்​டு​போய்க் கிடக்​கிறார்​கள். அவர்​களுக்கு ஆறு​தல் சொல்​லக்​கூட யாருக்​கும் நேரமில்​லை. ஆளாளுக்கு சுயநல​மாக சிந்​தித்து கட்​சியை ரெண்​டு​படுத்​தி​விட்​டு, “அதி​முக-வை உடைக்க வேண்​டும் என்​பது எங்​களது எண்​ணமில்​லை” என்​பவர்​கள், “பொதுக்​குழுவை கூட்​டு” என்று போர்க்​குரல் எழுப்​பு​கிறார்​கள். பதி​லுக்​கு, “கட்சி மாறி வாக்​களித்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுங்​கள்” என சபா​நாயகரிடம் மனு கொடுத்​திருக்​கிறது எதிர்​தரப்​பு. மொத்​தத்​தில், மீண்​டும் நீதி​மன்ற படி ஏறி நீதி​கேட்​கும் நெருக்​கடிக்கு ஆளாகி இருக்​கிறது அதிமுக.