惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
I
InfoQ
博客园_首页
G
Google Developers Blog
爱范儿
爱范儿
Last Week in AI
Last Week in AI
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Vercel News
Vercel News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
月光博客
月光博客
The GitHub Blog
The GitHub Blog
V
Visual Studio Blog
N
Netflix TechBlog - Medium
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஆட்​சி​யில் அதி​முக பங்கெடுப்பது முரண்பாடான விஷ​யம்!” - ...
2026-05-13 · via hindutamil
குள.சண்முகசுந்தரம்

Updated on

2 min read

தமிழக அரசி​யலில் யாரும் எதிர்​பா​ராத திருப்​ப​மாக அதி​முக சட்டமன்ற உறுப்​பினர்​களில் ஒரு பகு​தி​யினர் தவெக அரசுக்கு ஆதர​வளிக்​கும் முடிவை எடுத்​திருக்​கிறார்​கள். இதனால் அதி​முக இன்​னொரு பிளவை நோக்கி அப்​பட்​ட​மாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலை​யில், அக்​கட்​சி​யின் செய்​தித் தொடர்​புச் செய​லா​ளர் வைகைச் செல்​வனிடம் சில கேள்வி​களை முன்வைத்தோம். அவரது பதில்​கள் இங்​கே:

Q

அதி​முக இன்​னொரு பிளவை நோக்கி வேக​மாக நகர்​கிறதோ?

A

தவெக-வை ஆதரிப்​போம் என்​பது தான் சி.​வி.சண்​முகம் தரப்பு சொல்​கிறது. இப்​போது இருக்​கிற அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தவெக-வை ஆதரிக்​காது அதி​முக என்று சொல்லி இருக்​கிறார். ஆக இரண்டு தரப்​பும் பிளவுபட்டு நிற்​பது வெட்ட வெளிச்​சம். ஆனாலும் அதி​முக ஒன்​று​பட்​டுத்​தான் இருக்​கிறது. எம்எல்​ஏ-க்​கள் தான் பிளவுபட்டு நிற்​கிறார்​கள்.

Q

திமுக ஆதர​வுடன் ஆட்​சி​யமைக்​கும் முடிவை அதி​முக எப்​படி எடுத்​தது... யார் இந்த முடிவை எடுத்​தார்​கள்?

A

இது அரசல் புரசலாகப் பேசப்​பட்ட விஷ​யம் தான். 3 முக்​கியக் கட்​சிகளுக்​கும் அறு​திப் பெரும்​பான்மை இல்​லை. அதனால், ஆட்​சி​யமைக்க முடி​யாத தடு​மாற்ற நிலை தவெக-வுக்​கு. அதனால், திமுக - அதி​முக சேர்ந்து ஆட்​சி​யமைக்க உரிமை கோரி​னாலும் அழைக்​கப்​படு​வார்​கள் என்ற கருத்தை ஆளுநர் தெரி​வித்​தார். இதையடுத்​து, இரண்டு தரப்​பிலும் ஒரு நிலைப்​பாட்டை நோக்​கிச் செல்​வ​தாக ஒரு செய்தி வெளி​யானது.

Q

உண்​மை​யில் அப்​படி​யான ஒரு ‘மூவ்’ நடந்​ததா இல்​லை​யா?

A

உறு​தி​யிட்​டு, அறு​தி​யிட்டு சொல்​ல​முடி​யாது என்​றாலும் அப்​படியொரு பூடக​மான பேச்சு உலா வந்​தது.

Q

பூடக​மாக வெளி வந்​தா​லும் அதி​முக தரப்​பில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் அப்​போது அதை மறுக்​க​வில்​லை​யே?

A

ஏன் மறுக்​க​வில்லை என்​றால், எங்​களைப் போன்​றவர்​களை ஊடகங்​களில் இது விஷய​மாக எது​வும் பேசவேண்​டாம் என்று சொல்லி இருந்​தார்​கள். அதனால் மறுப்​புச் சொல்​ல​வில்​லை.

Q

திமுக-​வும் அதி​முக-​வும் திரு​மாவை முதல்​வ​ராக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டது உண்​மை​யா?

A

அது​வும் செவிவழிச் செய்​தி​தான்.

Q

தவெக-வை ஆட்​சி​யமைக்க விடக்​கூ​டாது என்​பது தான் இந்த நகர்வு​களின் ஒட்​டுமொத்த நோக்​க​மா?

A

அப்​படியல்​ல... தவெக ஆட்சி அமைக்க முடி​யாத நிலை​யில் இருந்த போது, அதற்கு அடுத்த நிலை​யில் இருக்​கும் இரண்டு கட்​சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்​தால் என்ன என்ற கேள்வி எழுந்​தது.

எதிரெ​திர் நிலைப்​பாட்​டில் இருக்​கும் கட்​சிகள் ஒன்​றிணைவது சாத்​தி​யமா என்ற கேள்​வி​யும் எழுந்​தது. மகா​ராஷ்டி​ரா​விலும் பிஹாரிலும் அப்​படி நடந்​திருப்​ப​தாக முன்​னு​தா​ரணங்​கள் சொல்​லப்​பட்​டது. இதெல்​லாம் தான் வெளி​யில் வேறு மாதிரி​யாக கசிந்து​விட்​டது.

Q

ஒரு​வேளை, திமுக தயவில் அதி​முக ஆட்சி அமைத்​திருந்​தால் என்​ன​வாகி இருக்​கும்?

A

தற்​கொலை முயற்​சி​யாகி இருக்​கும். இரண்டு கட்​சிகளுமே மக்​கள் மத்​தி​யில் நம்​பகத் தன்​மையை இழந்​திருக்​கும்.

Q

இந்த முயற்சி அதி​முக-வை அழி​வுப்​பாதைக்கு இட்​டுச் செல்​லும் என்று பழனி​சாமிக்கு தெரி​யா​தா?

A

தெரி​யுங்​க... அதனால் தான் இன்​றைக்கு அதை வதந்தி என்​கிறார்.

Q

வதந்தி என்​றால் “இன்​னும் 2 நாளில் நல்ல செய்தி வரும்” என்று பழனி​சாமி எதைச் சொன்​னார்?

A

தவெக-வுக்கு ஆதர​வளிப்​ப​தாக அவர் தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தி இருக்​கலாம். அதைக்​கூட அப்​படி சொல்லி இருக்​கலாமே.

Q

ஆனால், இரண்டு நாட்​களாக விஜய்​யின் நடவடிக்​கைகளைப் பார்த்​தால் அப்​படி​யான முயற்சி ஏதும் நடந்​த​தாகத் தெரிய​வில்​லை​யே?

A

வெளி​யில் சொல்​ல​முடி​யாத சில ரகசி​யங்​கள் இதில் இருக்​கிறது. சில காரணங்​கள் கருதி அதையெல்​லாம் வெளிப்​படை​யாக பேச​முடி​யாது.

Q

அமைச்​சர் பதவிக்​காகத்​தான் சி.​வி.சண்​முகம் போன்​றவர்​கள் தவெக-வை ஆதரிக்​கும் முடிவுக்கு வந்​த​தாகச் சொல்​கிறாரே ஓ.எஸ்​.மணி​யன்?

A

அமைச்​சர் பதவி தரு​வார்​களா என்றே தெரிய​வில்​லை. இருப்பினும், ஓர் அதி​காரத்தை நோக்கி நகர்​கிறார்​கள் என்​பது மட்டும் உண்​மை.

Q

அதி​முக என்​பது எம்​எல்​ஏ-க்​கள் மட்​டுமல்ல என்று சொல்லி இருக்​கிறாரே பழனி​சாமி?

A

ஆமாம். பொதுக்​குழு, செயற்​குழு, நகரம், ஒன்​றி​யம், பேரூர் கழகம் என அதி​முக நிர்​வாகி​களும் தொண்​டர்​களும் இருக்​கிறார்​கள். ஒரு கோடிக்கு மேல் வாக்​களித்த மக்​கள் இருக்​கிறார்​கள். இது எல்​லா​மும் தான் அதி​முக. 5 ஆண்​டு​களுக்கு மட்​டுமே தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எம்​எல்​ஏ-க்​கள் மட்​டுமே அதி​முக அல்ல. அதேசம​யம், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​களை குறைத்து மதிப்​பிட​வும் கூடாது.

Q

தவெக ஆதரவு நிலைப்​பாட்டை அதி​முக என்ற கட்சி எப்​படி எடுத்​துக் கொள்​ளும்?

A

தவெக-வை எதிர்த்து நின்று வெற்​றி​பெற்​று​விட்டு அந்​தக் கட்​சி​யின் ஆட்​சி​யில் பங்​கெடுப்​பது என்​பது முரண்​பா​டான விஷ​யம் தான்.

Q

தேர்​தலுக்கு முன்பே கட்​சிக்​குள் இருந்த கொதி​நிலை தான் அதி​முக-​வின் இப்​போதைய பிளவுக்கு பிர​தான காரணம் என எடுத்​துக் கொள்​ளலா​மா?

A

அதிலென்ன சந்​தேகம். எல்​லோரிடத்​தி​லும் கலந்​துரை​யாடல் செய்​ய​வில்​லை; விவா​திக்​க​வில்​லை. வேட்​பாளர் தேர்​வில் திறந்த மனதில்​லை. பணம் படைத்​தவர்​களே வேட்​பாளர்​களாக தேர்வு செய்​யப்​பட்​டார்​கள். இவை எல்​லா​முமே கட்​சி​யின் இப்​போதைய நிலைக்​குக் காரணம்.

Q

தவெக ஆதரவு நிலைப்​பாடு என்​பது அதி​முக-வுக்​குள் எத்​தகைய சூழலை உரு​வாக்​கும்?

A

தோற்​றதற்​கான காரணங்​களை ஆராய்ந்​து, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு கட்​சியை மேலும் வலுப்​படுத்​த வேண்டும். அதுதான் சரி​யாக இருக்​கும். அதை விடுத்​து, திமுக-வுடன் நகர்​வதும் தவெக-வுடன் நகர்​வதும் தவறான வழிகாட்டல்கள்.