惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிலப்பரப்பு: ஒளிப்பதிவில் புவியியலின் ஆதிக்கம் | ஒளி என்ப...
சி.ஜெ.ராஜ்குமார் · 2026-06-24 · via hindutamil

பேரி லிண்​டன்...

Updated on: 

நிலப்​பரப்பு என்​பது ‘மிஸ்​-என்​-சீன்’ (Mise-en-scene) இன் மிக முக்​கிய​மான அங்​க​மாகும். இது கதா​பாத்​திரத்​தின் உளவியல், காட்​சி​யின் வேகம் மற்​றும் கதை​யின் ஒட்​டுமொத்​தத் தன்​மை​யை​யும் வடிவ​மைப்​ப​தோடு படத்​தின் உணர்ச்சி நிலை​யை​யும் (Emotional Temperature) அளவிடும் கரு​வி.

நிலப்​பரப்​பு: ஓர் உயிருள்ள கதா​பாத்​திரம் பல சிறந்த திரைப்​படங்​களில், சூழல் என்​பது ஒரு மனிதனைப் போலவே வினைபுரி​கிறது. இது கதா​பாத்​திரத்​தைச் சூழ்ந்து நிற்​ப​தோடு அவர்​களோடு உரை​யாடு​கிறது.

பிரிட்ஜ் ஆன் த ரிவர் குவாய்

இயக்​குநர் டேவிட் லீன் இயக்​கிய இந்​தத் திரைப்​படம், நிலப்​பரப்பு ஒரு கதையை எப்​படி வழிநடத்​தும் என்​ப​தற்​குச் சான்​று. இந்​தப் படத்​தின் கதை தாய்​லாந்​தில் நடப்​ப​தாக இருந்​தா​லும், இதன் படப்​பிடிப்பு முழு​வதும் இலங்​கை​யில் நடை​பெற்​றது.

இலங்​கை​யின் கிதுல்கல பகு​தி​யில் உள்ள கேலனி ஆற்​றின் குறுக்​கே, படத்​துக்​காகவே ஒரு பாலம் கட்​டப்​பட்​டது. அடர்ந்த மழைக்​காடு​கள் சூழ்ந்த இந்​தப் பகு​தி, தென்​கிழக்கு ஆசி​யா​வின் போர்ச் சூழலைத் தத்​ரூப​மாகப் பிர​திபலித்​தது.

ஒளிப்​ப​தி​வாளர் ஜாக் ஹில்​யார்ட், காட்​டின் இடுக்​கு​களின் வழியே ஊடுரு​வும் இயற்கை ஒளியைப் பயன்​படுத்​தி, ஒழுங்​குக்​கும் (பாலம்) குழப்​பத்​துக்​கும் (போர் மற்​றும் இயற்​கை) இடையி​லான மோதலை அழகாகக் காட்​டி​னார்.

ஒரு தலை​முறையை உரு​வாக்​கிய நிலப்​பரப்பு

இந்​தத் திரைப்​படத்​தின் படப்​பிடிப்பு இலங்​கை​யில் நடந்​த​போது, அதை நேரில் பார்க்​கும் வாய்ப்பு ஓர் இளைஞனுக்​குக் கிடைத்​தது. அந்​தப் பிரம்​மாண்​ட​மான நிலப்​பரப்​பும், ஒரு பாலத்​தையே உரு​வாக்கி அதனைப் படமாக்​கிய வித​மும் அந்த இளைஞனை வியப்​பில் ஆழ்த்தியது.

அவர்​தான் பிற்​காலத்​தில் இந்​திய சினி​மா​வின் ஆகச்​சிறந்த ஒளிப்​ப​தி​வாளர் மற்​றும் இயக்​குந​ராகத் திகழ்ந்த பாலுமகேந்​தி​ரா. அந்த நிலப்​பரப்​பும், படப்​பிடிப்​புத் தளத்​தின் நேர்த்​தி​யும்​தான் அவரை திரைக்​கலைஞ​னாக மாற்​றிய விதை.

சைக்​கோ: அச்​சுறுத்​தும் நிலப்​பரப்பு

சைக்கோ (1960): ஆல்ஃபிரட் ஹிட்ச்​காக்​கின் இந்​தப் படத்​தில் வரும் அந்த ‘பேட்ஸ் ஹவுஸ்’ ஒரு மேட்​டின் மீது தனித்து நிற்​கும் விதம், அதன் நிலப்​பரப்பு சார்ந்த இருப்​பிடம் ஒரு​வித​மான அச்​சுறுத்​தலை உரு​வாக்​கு​கிறது. அந்த வீட்​டின் நிலப்​பரப்பு அமைப்​பு, நார்​மன் பேட்​ஸின் சிதைந்த மனநிலை​யின் குறி​யீ​டாகவே செயல்​படு​கிறது.

காட்சி அமைப்பு மற்​றும் ஃபிரேமிங்

ஒரு நிலத்​தின் புவி​யியல் அமைப்​பே, கேமரா கோணங்​களைத் தீர்​மானிக்​கிறது.

பரந்த நிலங்​கள்: மனித உரு​வத்​தைச் சிறிய​தாகக் காட்​டி, இயற்கையின் பிரம்​மாண்​டத்தை உணர்த்​தும் ‘லாங் ஷாட்​கள்’ (Long shots).

குறுகிய நகர வீதி​கள்: நெருக்​க​மான பிரேம்​கள் (Tight frames) மூலம் மூச்​சுத்​திணறல் அல்​லது அழுத்​தம் (Claustrophobia) போன்ற உணர்​வு​களை உரு​வாக்​குதல்.

உளவியல் பிர​திபலிப்பு

கதா​பாத்​திரத்​தின் அக உலகை, நிலப்​பரப்பு கண்​ணாடி​யாகப் பிர​திபலிக்​கிறது.

கும்கி: அந்த உயர​மான நீர்​வீழ்ச்​சி​யும் (Jog Falls), அடர்ந்த காடும் ஒரு காதலின் பிரம்​மாண்​டத்​தை​யும், அதே நேரம் அதன் ஆபத்​தை​யும் உணர்த்​தின. புயல் என்​பது மனப்​போ​ராட்​டத்​தின் குறி​யீடு. அமை​தி​யான கடல் தற்​காலிக​மான அமை​தியை அல்​லது மாயையை உணர்த்​துகிறது.

<div class="paragraphs"><p>பிரிட்ஜ் ஆன் த ரிவர் குவாய்...</p></div>

பிரிட்ஜ் ஆன் த ரிவர் குவாய்...

ஒலி வடிவ​மைப்பு மற்​றும் அசைவு​கள்

ஒவ்​வொரு நிலப்​பரப்​புக்​கும் ஒரு தனித்​து​வ​மான சத்​தம் உண்​டு. வயல்​களில் வீசும் காற்​றின் சத்​தம், நகரத்​தின் போக்​கு​வரத்து இரைச்​சல், பனி​யில் நில​வும் நிசப்​தம்- இவை அனைத்​தும் பார்​வை​யாளரை அந்த உலகுக்​குள்ளே கொண்டு செல்​கின்​றன. அதே​போல, மணலில் நடப்​பது ஒரு போராட்​ட​மாக​வும் சரிவு​களில் நடப்​பது ஒரு டைனமிக் அசை​வாக​வும் மாறும்.

பேரி லிண்​டன்: ஓவிய​மாக விரிந்த நிலப்​பரப்பு

ஸ்டான்லி குப்​ரிக்​கின் இந்​தப் படம் அயர்​லாந்​தின் பசுமை​யான நிலப்​பரப்​பு​களை அப்​படியே ஒரு எண்​ணெய் ஓவிய​மாக மாற்​றியது. பகல் காட்​சிகளில் நில​வும் மென்​மை​யான மேக மூட்​டத்​தை​யும், இயற்கை ஒளியை​யும் ஒளிப்​ப​தி​வாளர் ஜான் அல்​காட் கையாண்ட விதம், அந்த காலக்​கட்​டத்​தின் வாழ்​வியலைக் காட்​டியது.

பழக்​க​மான மற்​றும் அந்​நிய​மான நிலப்​பரப்பு

திரைக்​கதை​யில் நிலப்​பரப்​பின் தாக்​கம் இரு​வேறு கோணங்​களில் செயல்​படு​கிறது. ஒரு கதா​பாத்​திரத்தை அதன் சொந்த நிலத்​தில் காட்​டும்​போது அது அந்​தக் கதா​பாத்​திரத்​தின் அதி​காரத்​தை​யும், வேரூன்​றிய கலாச்​சா​ரத்​தை​யும் காட்​டு​கிறது.

பாண்​டிச்​சேரி வீதி​களிலோ அல்​லது மதுரை​யிலோ ஒரு கதை நடக்​கும்​போது, அந்த நிலப்​பரப்பு கதா​பாத்​திரத்​துக்கு ஒரு ‘பாது​காப்​பு’ உணர்​வைத் தரும். ஒரு கதா​பாத்​திரத்தை அதற்கு முற்​றி​லும் பழக்​கமில்​லாத, ஆபத்​தான நிலப்​பரப்​பில் வீசும்​போது அந்த நிலமே வில்​ல​னாக மாறுகிறது.

அஜர்​பைஜான் போன்ற அந்​நிய நிலப்​பரப்​பில் ஒரு கதை நடக்​கும் போது, மொழி தெரி​யாத சூழலும், பழகாத புவி​யியல் அமைப்​பும் இணைந்து ‘வி​டா​முயற்​சி’ திரைப்​படத்​தில் கதா​பாத்​திரத்​தின் பதற்​றத்தை பலமடங்கு உயர்த்​துகிறது. இங்கே நிலப்​பரப்பு என்​பது சிக்​கலான ‘மேஸ்’ (Maze) போலச் செயல்​பட்​டு, தப்​பிக்க முடி​யாத உணர்​வைத் தரு​கிறது.

இந்தி சினி​மா​வும் ஸ்விட்​சர்​லாந்​தும்

இந்​தி​யா​வின் வெப்​ப​மான சூழலுக்கு நேர்​மாறாக, சுவிட்​சர்​லாந்​தின் பனி படர்ந்த மலைகளை​யும், பூத்​துக்​குலுங்​கும் புல்​வெளி​களை​யும் காதலின் குறி​யீ​டாக மாற்​றி​னார் யஷ் சோப்​ரா. இந்​தி​யப் பார்​வை​யாளர்​களுக்கு அது ஒரு ‘கனவு நிலப்​பரப்​பாக’ மாறியது. அங்​குள்ள குளிர்ச்​சி​யான நீல நிற​மும், வெண்​மை​யும் காதலின் தூய்​மை​யைப் பிர​திபலிக்​கப் பயன்​படுத்​தப்​பட்டன

அபூர்​வ​மான சிறந்த படங்​கள் மற்​றும் நிலப்​பரப்பு

அதி​கம் பேசப்​ப​டாத, ஆனால் சிறந்த நிலப்​பரப்பு பயன்​பாட்​டைக் கொண்ட சில படங்​கள்:

தி மெசினிஸ்ட் (The Machinist): அந்​தத் தொழிற்​சாலை மற்​றும் நகர்ப்​புற நிலப்​பரப்பு ஒரு மனிதனின் குற்ற உணர்ச்​சி​யை​யும் சிதைந்த மனநிலை​யை​யும் சாம்​பல் நிறத்​தில் பிர​திபலிக்​கும்.

விண்ட் ரிவர் (Wind River): பனி அடர்ந்த நிலப்​பரப்பு ஒரு கொலை​யின் மர்​மத்தை மட்​டுமல்ல, அங்கு வாழும் மக்​களின் தனிமை​யை​யும் மிக அழகாகக் காட்​டியது.

நிலப்​பரப்பு ஒளிப்​ப​திவு என்​பது ஒரு ஒழுக்​கத்​தைக் கோரு​கிறது. மேகங்​கள் நகர்​வதற்​காகக் காத்​திருப்​பது, சரி​யான சூரியக் கோணத்​தைப் படம்​பிடிப்​பது என ஒளிப்​ப​தி​வாளர் ஒரே நேரத்​தில் கவிஞ​னாக​வும், விஞ்​ஞானி​யாக​வும் சிந்​திக்க வேண்​டும்.

ஓர் இயக்​குநர் நிலப்​பரப்​பைத் தேர்ந்​தெடுக்​கும்​போது கேட்க வேண்​டிய கேள்வி இது​தான்: “இந்​த இடம்​ எனது கதைக்​கு என்​ன செய்​கிறது - இது வெறும்​ கதை நடக்​கும்​ இடம்​ மட்டும்தானா?"

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com