惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
小众软件
小众软件
量子位
MongoDB | Blog
MongoDB | Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
207 தொகுதிகளைக் கைப்பற்றி மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றி
2026-05-05 · via hindutamil

Updated on

3 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் 207 தொகு​தி​களைக் கைப்​பற்றி பாஜக அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​துள்​ளன.

மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு கடந்த 23, 29-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற்​றது. ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், காங்​கிரஸ் கட்​சிகள் தனித்​தனி​யாக போட்​டி​யிட்​டன. இதில் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வியது.

ஒரு தொகு​தி​யில் மறு​தேர்​தல்: கடந்த 29-ம் தேதி மேற்​கு​வங்​கத்​தின் பால்டா தொகு​தி​யில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இந்த தொகு​தி​யில் அதிக முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து பால்டா தொகு​தி​யில் மொத்​த​முள்ள 285 வாக்குச்சாவடிகளி​லும் மே 21-ம் தேதி மறு வாக்​குப்​ப​திவு நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

பால்டா தொகு​தியை தவிர்த்து மீத​முள்ள 293 தொகு​தி​களில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. ஆரம்​பம் முதலே பாஜக முன்​னிலை வகித்து வந்​தது. பல்​வேறு தொகு​தி​களில் திரிண​மூல் காங்​கிரஸ் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. கம்​யூனிஸ்ட் கட்​சிகள், காங்​கிரஸ் கட்​சிக்கு மிகக் குறை​வான வாக்​கு​களே கிடைத்​தன. நள்​ளிரவு நில​வரப்​படி பாஜக 207 தொகு​தி​களைக் கைப்​பற்றி அபார வெற்றி பெற்​றது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​தன.

காங்​கிரஸ் 2, மார்க்​சிஸ்ட் 1, ஏஐஎஸ்​எப் 1 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. திரிண​மூல் காங்​கிரஸில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்​கிய ஹுமாயூன் கபீரின் ஏஜே​யுபி கட்சி 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது.

மம்தா அதிர்ச்சி தோல்வி: பவானிபூர் தொகு​தி​யில் முதல்​வர் மம்​தா, பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி இடையே கடும் போட்டி நில​வியது. இறு​தி​யில் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இறுதியில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் சுவேந்து அதி​காரிக்​கும் திரிண​மூல் வேட்​பாளர் பபித்ரா கர்​ருக்​கும் இடையே கடும் போட்டி நில​வியது. இறு​தி​யில் 1,27,301 வாக்​கு​களை பெற்று சுவேந்து வெற்றி பெற்​றார். பபித்ரா கர்​ருக்கு 1,17,636 வாக்​கு​கள் கிடைத்​தன.

மருத்​துவ மாணவி தாய் வெற்றி: கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்​டில் கொல்​கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இரவு பணி​யில் இருந்த பெண் மருத்​து​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டார். அந்த மாண​வி​யின் தாய் ரத்னா தேவ்​நாத், பாஜக சார்​பில் பனிஹாட்டி தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் 56,167 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட தீர்த்​தங்​கர் கோஷ் 35,704 வாக்​கு​கள் பெற்​றார்.

சந்​தேஷ்​காளி பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட ரேகா பத்​ரா, பாஜக சார்​பில் ஹிங்​கல்​கஞ்ச் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் 89,122 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட திரிண​மூல் வேட்​பாளர் அனந்த சர்க்​காருக்கு 85,830 வாக்​கு​கள் கிடைத்​தன.

மேற்​கு​வங்​கத்​தில் வன்​முறை: பவானிபூர் தொகு​தி​யில் பதி​வான வாக்​கு​கள் பவானிபூர் உள்ள பள்​ளி​யில் எண்​ணப்​பட்​டன. அங்கு முதல்​வர் மம்​தா​வும் சுவேந்து அதி​காரி​யும் ஒரே நேரத்​தில் சென்​ற​னர். அப்​போது திரிண​மூல், பாஜக தொண்​டர்​களிடையே மோதல் ஏற்​பட்​டது. மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் தலை​யிட்டு மோதலை தடுத்து நிறுத்​தினர்.

கூச் பெகர் பகு​தி​யில் பாஜக, திரிண​மூல் தொண்​டர்​களுக்கு இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர். மேற்​கு​வங்​கத்​தின் அசன்​சோல் அருகே ஜமுரியா பகு​தி​யில் திரிண​மூல் காங்​கிரஸ் அலு​வல​கம் உள்​ளது. இந்த அலு​வல​கத்​துக்கு மர்ம நபர்​கள் நேற்று தீ வைத்​தனர். இதில் திரிண​மூல் அலு​வல​கம் எரிந்து நாச​மானது. உள்​ளூர் பாஜக தொண்​டர்​கள் தீ வைத்​திருப்​ப​தாக திரிண​மூல் குற்​றம் சாட்டி உள்​ளது. இதே​போல மேற்​கு​வங்​கத்​தின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். அவர்​கள் தொடர்ந்து மேற்​கு​வங்​கத்​திலேயே முகாமிட்டு இருப்​ப​தால் சட்​டம், ஒழுங்கு கட்​டுக்​குள் உள்​ளது.

பாஜக வெற்​றி​யின் பின்​னணி: பாஜக வெற்​றி​யின் ரகசி​யம் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக 38.4 சதவீத வாக்​கு​களை பெற்று 77 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அந்த கட்சி 45.46 சதவீத வாக்​கு​களை பெற்​றிருக்​கிறது. கடந்த தேர்​தலை​விட அந்த கட்சி 7 சதவீத வாக்​கு​களை மட்​டுமே கூடு​தலாக பெற்​றிருக்​கிறது. ஆனால் கடந்த தேர்​தலை​விட இந்த தேர்​தலில் கூடு​தலாக 120-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களை பாஜக கைப்​பற்றி உள்​ளது.

பாஜக கடந்த முறை வெற்றி பெற்ற 77 தொகு​தி​களில் 76-ஐ தக்க வைத்​துள்​ளது. ஒரு தொகு​தி​யில் மட்​டும் தோல்வி அடைந்​திருக்​கிறது. ஆனால் கூடு​தலாக 120-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களை கைப்​பற்றி உள்​ளது. கடந்த 2021 பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் 48.5 சதவீத வாக்​கு​களை பெற்​றது.

தற்​போதைய தேர்​தலில் அந்த கட்சி 40.81 சதவீத வாக்​கு​களை பெற்​றுள்​ளது. கடந்த தேர்​தலை​விட இந்த தேர்​தலில் 7.69 சதவீத வாக்​கு​களை திரிண​மூல் இழந்​திருக்​கிறது. இதன்​​காரண​மாக 125-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களை பறி​கொடுத்​திருக்​கிறது. இவ்​​வாறு அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்​.