惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
量子位
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
U
Unit 42
C
Check Point Blog
I
InfoQ
aimingoo的专栏
aimingoo的专栏
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
云风的 BLOG
云风的 BLOG
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்: திட்டத்தை மறுசீர...
2026-05-15 · via hindutamil

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated on

2 min read

சென்னை: மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் இடைநிற்​றல் இல்​லாமல் உயர்​கல்​வியைத் தொடர்​வதற்​காக புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்​டங்​கள் முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. அதன்​படி, புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாணவி​களுக்​கும், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் மாணவர்​களுக்​கும் மாதம்​தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாத​மும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்​கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முந்​தைய அரசுகளால் கொண்டு வரப்​பட்ட முக்​கிய மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் உறுதியளித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கிலும் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. இதனால் மாணவர்​கள், பெற்​றோர் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதற்​கிடையே, தமிழகம் முழு​வதும் 1.31 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாதம் 15-ம் தேதி​யும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. நடப்பு மே மாதத்​துக்​கான உரிமைத் தொகை, பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதே​நேரம் முதல்​வரின் அறி​விப்பை திமுக தலை​வர் ஸ்டா​லின் விமர்​சனம் செய்​துள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், ‘தி​முக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் சொன்​னீர்​கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்​டும். ஏற்​கெனவே உள்ள திட்​டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்​யப் போகிறீர்​கள்? மாதம் ரூ.2,500 தரு​வ​தாக வாக்​குறுதி தந்​து​விட்​டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்​தடிப்​பது​தான் உங்​கள் மாற்​ற​மா?’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

முதல்​வர் ஆலோ​சனை: அரசின் நிதி​நிலை​யைப் பொருத்து நலத் ​திட்​டங்​களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்​டும். அரசின் நிதி​நிலை தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்​வ​ராக பதவி​யேற்ற விழா​விலேயே விஜய் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் தமிழக அரசின் நிதி​நிலை தொடர்​பாக துறை​சார்ந்த உயர் அதி​காரி​களு​டன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

தலை​மைச் செயலர் ​சாய்​கு​மார், நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் உள்​ளிட்ட அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நடப்பு ஆண்​டுக்​கான பட்​ஜெட், புதிய திட்​டங்​களுக்​குத் தேவைப்​படும் நிதி ஒதுக்​கீடு, முந்​தைய திமுக ஆட்​சி​யில் நிதி​சார் செயல்​பாடு​கள் தொடர்​பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, தொழில் முதலீட்​டுக் கழகம் மற்​றும் வர்த்​தகத் துறை செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​ கூட்​ட​மும்​ நடை​பெற்​றது.