惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园_首页
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 【当耐特】
V
Visual Studio Blog
月光博客
月光博客
G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
腾讯CDC
云风的 BLOG
云风的 BLOG
美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தலின் போது அந்நிய செலாவணி குறித்து பிரதமர் மோடி அறிய...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

ஹைதராபாத்: தேர்தலின் போது தேசத்தின் அந்நிய செலாவணி குறித்த விவரத்தை பிரதமர் மோடி அறியவில்லையா? என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதரபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்துமாறும், ரசாயன உரங்களை தவிர்க்குமாறும், வீட்டில் இருந்து பணியாற்றும் முறைக்கு திரும்புமாறும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி குறையும் என அவர் தெரிவித்தார். இதை திங்கட்கிழமை அன்று குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்விலும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றன. இந்த சூழலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி செவ்வாய்க்கிழமை அன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“எனது கேள்வி என்னவென்றால் தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த உள்ளதை தெரிவிக்காமல் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பிரதமர் மோடி மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆனால், இப்போதோ இத்தகைய இன்னல்கள் அனைத்தையும் சகித்துக் கொள்பவர்கள் தான் தேசபக்தி கொண்டவர்கள் என இதை சித்தரிக்கிறார். அப்போது நாட்டின் அந்நிய செலாவணி குறித்து பிரதமர் மோடி அறியவில்லையா? அல்லது மவுனம் காத்தரா?

பிரதமர் மோடியின் ஹைதராபாத் உரைக்கு பின்னர் பங்குச்சந்தையில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் போர் முடிவுக்கு வரும் நிலையை நெருங்கி உள்ளது. இத்தகைய சூழலில் இதுநாள் வரை இந்த இன்னல்களை சமாளித்த அரசு இப்போது ஏன் அதை இன்னும் சில காலத்துக்கு செய்யக்கூடாது. இப்பொது ஏன் பிரதமர் இப்படி இந்த விவகாரத்தை பார்க்கிறார்?

இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்பது நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் சுமையாகும். இது சாமானிய மற்றும் விளிம்புநிலை மக்களை பெரிதும் பாதிக்கும். போக்குவரத்து கட்டணம் உயரும். இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும். இப்படி இருக்கும் சூழலில் இதை தேசபக்தியோடு பிரதமர் மோடி தொடர்பு படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?” என அவர் கேட்டுள்ளார்.