
























சென்னை: அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அக்கட்சியைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பதவியைத் தக்கவைப்பதில் பழனிசாமிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள 30 எம்எல்ஏக்களின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி,.வி. சண்முகம் தலைமையிலான குழுவில் அதிகப்படியான எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுவதால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。