惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 【当耐特】
量子位
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
The Cloudflare Blog
小众软件
小众软件
J
Java Code Geeks
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
H
Help Net Security
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராமதாஸ் + அன்புமணி பின்னணியும், ஸ்ரீகாந்தி அதிருப்தியும்!...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

பாமகவில் ஒன்​றரை ஆண்​டு​களாக நீடித்து வந்த தந்தை - மகன் அதி​காரப் பகிர்வு பிரச்​சினை ராம​தாஸ் திருமண நாளில் முடிவுக்கு வந்தது. பாமக நிறு​வனர் ராமதாஸுக்கும் அதன் தலை​வர் அன்புமணிக்கும் இடையி​லான பிரச்​சினை​யால் கடந்த சட்​டப்​பேரவை தேர்தலில் இருதரப்​பும் தனித்​தனி​யாக செயல்பட்டனர்.

ராம​தாஸின் மிகக் கடுமை​யான விமர்​சனத்​தை​யும் மீறி சவுமியா அன்​புமணி உள்பட 4 பாமக எம்​எல்​ஏக்​கள் வெற்றி பெற்​றனர். தேர்தலுக்கு பிறகு அன்புமணி​யின் கை ஓங்​கியது. தைலாபுரத்துக்கு வரு​வதை பாமக​வினர் குறைத்​துக் கொண்டனர். யாரை​யும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளுக்காக சில அறிக்​கைகளை மட்​டும் ராமதாஸ் வெளி​யிட்டு வந்​தார்.

இதற்​கிடை​யில் தந்​தை, மகனை இணைக்க குடும்ப உறவுகளும், முக்​கிய நபர்​களும் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதற்காக ராம​தாஸின் திருமண நாள் சரியானதாக இருக்​கும் என நாள் குறிக்​கப்​பட்​டது.

அதன்​பேரில் ராம​தாஸ் - சரஸ்​வதி இணை​யரின் 61-வது திருமண நாளை​யொட்டி அவர்​களிடம் ஆசி பெறுவதற்காக அன்​புமணி, அவரது மனைவி சவுமி​யா, மகள்​கள் சம்யுக்​தா, சங்​கமித்​ரா, சஞ்​சுத்​ரா, இரு மருமகன்கள், பேரப்பிள்ளைகள் என அனை​வரும் புதன்கிழமை தைலாபுரத்​துக்கு வருகை தந்​தனர். ராமதாஸ் தரப்​பினர் அவர்​களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்​றனர்.

ஒன்​றரை ஆண்​டு​களாக மகனை சந்​திப்​பதை தவிர்த்துவந்த ராமதாஸ் நேற்று மகனை கண்​டதும் கட்டித்தழு​வி​னார். இரு​வரும் கண்ணீர் சிந்​தினர். தாயையும் அன்​புமணி அரவணைத்தார். மேலும் பேரப்பிள்​ளை​கள் மற்​றும் கொள்ளு பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழ்ந்​தார். அப்​போது அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனை​வரும் அவர்​களது காலில் விழுந்து ஆசிபெற்​றனர். பின்​னர் ஒன்​றாக அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

பின்​னர் அன்​புமணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அப்பா - அம்​மா​வின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்​துடன் சென்று வாழ்த்​துகளை​யும், ஆசிர்வாதங்களை பெற்​றுக் கொண்டோம். இனி நல்​லது நடக்​கும்” என்​றார்.

ஒன்​றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்​தது பாமகவினரை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்தி இருக்​கிறது. ராம​தாஸை அன்​புமணி குடும்​பத்​துடன் வந்து சந்தித்தபோது அவரது இளைய சகோ​தரி கவிதா உடன் இருந்​தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்​தி, அவரது மகன் முகுந்​தன் உள்​ளிட்​டோர் புறக்​கணித்​தனர்.

தலை​வர் பதவியை தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக அறிவித்த ராம​தாஸ், அன்புமணிக்கு வழங்​கிய செயல் தலை​வர் பதவியை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார். தந்தை - மகன் ஒன்​றாக இணைந்தாலும் குடும்​பத்​தில் உள்ள பிரச்​சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்​கிறது. பாமக செயல் தலைவர் பதவி​யில் ஸ்ரீகாந்தி இருப்​ப​தால் கட்​சி​யிலும் புகைச்​சல் தொடரும் என கருதப்​படு​கிறது.

வலுக்கட்டாயமாக கட்சிப் பதவியில் அமரவைக்கப்பட்டவர் ஸ்ரீகாந்தி. ஆகவே, எம்.பி., எம்எல்ஏ ஆகாமல் ஓயப்போவதில்லை என்ற திட்டத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனக்கு இப்படியொரு அதிகாரக் கனவு இருக்க, அப்பாவும் பிள்ளையும் ராசியாகிவிட்டால் தனது எதிர்பார்ப்பு கனவாகவே முடிந்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறாராம் மகள்.