惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
腾讯CDC
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog
V
Visual Studio Blog
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
博客园 - Franky
Y
Y Combinator Blog
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஒரு தலைமுறைக்கான வாய்ப்பு” - இந்தியா உடனான வர்த்தக ஒப்பந...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

வெலிங்டன் (நியூசிலாந்து): இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்துக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பு என்று அதன் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து இடையி​லான வரலாற்​றுச் சிறப்​புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் டெல்​லி​யில் கடந்த 27ம் தேதி கையெழுத்​தானது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மற்​றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்​சர் டாட் மெக்லே ஆகியோர் முன்​னிலை​யில் இந்த ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் அடுத்த 15 ஆண்​டு​களில் இந்தியா​வுக்கு சுமார் 20 பில்​லியன் டாலர் ( இந்​திய மதிப்பில் சுமார் ரூ.1.88 லட்​சம் கோடி) மதிப்​பிலான முதலீடு​கள் கிடைக்​கும் என்​றும், இருதரப்பு வர்த்​தகம் இரு​மடங்​காக உயரும் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுடன் நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது ஒரு மிகச் சிறந்த செய்தி. நியூஸிலாந்துக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பு இது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்தற்கான காரணம் மிகவும் எளிமையானது. இந்தியா இப்போது பூமியிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.

இந்தியாவில் 150 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் படிப்படியாக செல்வந்தர்களாக மாறி வருகிறார்கள். இதன் காரணமாக, நியூசிலாந்து போன்ற இடங்களில் இருந்து வரும் உயர்தரமான பொருட்கள் மற்றும் சேவையை அவர்கள் விரும்புகிறார்கள். அதோடு, மிக முக்கியமாக இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க உள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நிலையில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நிலைக்கு இந்தியா உயருவதால், நியூசிலாந்தின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். இப்படிப்பட்டச் சூழலில், இந்தியாவுடன் இணைந்து வளர்வதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு நியூஸிலாந்துக்கு உள்ளது.

இந்தியாவுக்குத் தேவைப்படும் பொருட்களில் சுமார் 95% பொருட்கள் நியூஸிலாந்தால் ஏற்றுமதி செய்ய முடியும். இதில், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் இருந்தே 57% பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒப்பந்தக் காலம் செல்லச் செல்ல சுங்கவரி விலக்கு பெறும் பொருட்களின் சதவீதம் படிப்படியாக உயரும். இதன்மூலம் கூடுதல் செலவுகளை சந்திக்க வேண்டிய அவசியம் நியூஸிலாந்துக்கு இருக்காது.

உலக அரங்கில் நியூஸிலாந்து ஏற்றுமதியாளர்களை போட்டித்தன்மை மிக்கவர்களாக இது மாற்றும். வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் உலகம் முழுவதிலும் இருந்து வரும் பொருட்களுடன் நம்மால் போட்டியிட முடியும்” என நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.