惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
H
Help Net Security
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘டேப்ஸ்' ஓய்வூதிய திட்ட இறுதி விதிகள் தயாராகும் வரை அடிப்...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​தி​யத் திட்ட இறுதி விதி​முறை​கள் வெளி​யிடப்​படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்​குப் பிறகு ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்​கள் - ஆசிரியர்​களுக்கு மட்​டும், அடிப்​படை சம்​பளத்​தில் 30 சதவீதம் அல்​லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதி​கமோ அத்​தொகை இடைக்​கால நிவாரண​மாக வழங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களின் நீண்​ட​கால கோரிக்​கையை நிறைவேற்​றும் வகை​யில் கடந்த 2025-ம் ஆண்டு ஜன.4-ம் தேதி, தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் (‘டேப்​ஸ்’) என்ற புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அதற்​கான அரசாணை வெளி​யிடப்​பட்​ட​போதும் அத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

‘டேப்​ஸ்’ ஓய்​வூ​திய திட்​டத்​தின் இறுதி விதி​கள் மற்​றும் கணக்​கீட்டு நடை​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டு​வரும் நிலை​யில், இடைப்​பட்ட காலத்​தில் ஓய்​வு​பெறும் ஊழியர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​கும் வகை​யில் இடைக்​கால நிவாரணத்​தொகை வழங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் இறுதி விதி​கள் அறிவிக்​கப்​பட்​டு, ஒவ்​வொரு ஊழியருக்​கும் அவர்​கள் கடைசி​யாகப் பெற்ற அடிப்​படைச் சம்​பளத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக நிர்​ண​யிக்​கும் பணிக்கு காலஅவ​காசம் தேவைப்​படும். எனவே, 1.1.2026-க்​குப் பிறகு ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு இடைக்​கால வாழ்​வா​தார ஆதர​வுத்​தொகை வழங்க முடிவுசெய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, ஓய்​வு​பெற்ற ஊழியர் கடைசி​யாகப் பெற்ற அடிப்​படைச் சம்​பளத்​தில் 30 சதவீதம் அல்​லது ரூ.10,000 இதில் எது அதி​கமோ அத்​தொகை இடைக்​கால நிவாரணத் தொகை​யாக நிர்​ண​யிக்​கப்​படும். அதோடு சேர்த்து நடை​முறை​யில் இருக்​கும் அதவிலைப்​படி​யும் வழங்​கப்​படும். இந்த இடைக்​கால நிவாரணத் திட்​டம் 1.4.2003 அன்று அல்​லது அதற்​குப்​பிறகு ரெகுலர் ஊதிய விகிதத்​தில் பணி​யமர்த்​தப்​பட்டு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் (சிபிஎஸ்) கீழ் இருந்​தவர்​கள்.

1.1.2026 அன்று பணி​யில் நீடித்​து, அதற்​குப்​பிறகு வயது முதிர்வு காரண​மாக ஓய்வு பெற்​றவர்​கள், குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தகு​தி​வாய்ந்த பணிக்​காலத்தை நிறைவு செய்​தவர்​கள், பணி​யின்​போது மரணமடைந்த அரசு ஊழியர்​களின் தகு​தி​யான குடும்ப உறுப்​பினர்​கள் ஆகியோ​ருக்கு மட்​டும் பொருந்​தும். அதே​நேரம் 1.1.2026-க்கு முன்​னர் பணியி​லிருந்து ஓய்​வு​பெற்​றவர்​களுக்​கும், பணி​யில் இருந்து வில​கிய​வர்​களுக்​கும் பொருந்​தாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு ஊழியர்​கள் கருத்து: இதுகுறித்து தமிழ்​நாடு தலை​மைச் செயலக சங்​கத் தலை​வர் கு.வெங்​கடேசன் கூறும்​போது, “இடைக்​கால நிவாரணத்​தொகை வழங்​கும் தற்​காலிக ஏற்​பாடு வரவேற்​கத்​தக்​கது. ஆனால், அரசு ஊழியர்​கள் ஓய்​வூ​தி​யத்​தில் ஒரு பகு​தியை முன்​கூட்​டியே பெறும் கம்​யூட்​டேசன் தொகை குறித்​தோ, பணிக்​கொடை பற்​றியோ அரசாணை​யில் எது​வும் குறிப்​பி​டாதது ஏமாற்​றம் அளிக்​கிறது. தேர்​தல் வாக்​குறுதி அளித்​த​படி தவெக அரசு, பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்த வேண்​டும். வரும் பட்​ஜெட் கூட்​டத் தொடரிலேயே அதுதொடர்​பான அறி​விப்பை வெளி​யிட வேண்​டும்” என்​றார்.

தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செய​லா​ளர் சோ.சுரேஷ் கூறும்​போது, “டேப்ஸ் ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான முழு விதி​முறை​களை​யும் அரசு விரைந்து வெளி​யிட வேண்​டும். தவெக அரசு தனது தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​வாறு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​த வேண்டும்’’ என்றார்.