
























Updated on
:
1 min read
கேரளாவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘வாழ 2’.
ஏப்ரல் 2-ம் தேதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் ரூ.10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது. இதனால் படக்குழுவினர் 3-ம் பாகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
தற்போது வரை கேரளாவில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது ‘வாழ 2’. இதுவரை அங்கு ‘லோகா’ படமே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை வைத்திருந்தது. அதனை ‘வாழ 2’ முறியடித்து மொத்த வசூல் ரூ.125 கோடியை கடந்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சாதனையை படம் வெளியாகி 25 நாட்களில் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
விபின் தாஸ் கதையினை சவின் எஸ்.ஏ இயக்கி முழுக்க புதுமுகங்கள் நடித்து வெளியான படம் ‘வாழ 2’. எந்தவித எதிர்பார்ப்பும், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் வெளியாகி இந்தளவுக்கு ‘வாழ 2’ வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。