惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
D
Docker
V
Visual Studio Blog
博客园 - 司徒正美
Martin Fowler
Martin Fowler
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
Vercel News
Vercel News
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மும்பையில் என்சிபி ...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் ரூ.1,745 கோடி மதிப்​பிலான கோகைன் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளது.

தென் அமெரிக்​கா, ஆப்​பிரிக்க நாடு​கள் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகம், துருக்​கி, பிரான்ஸ் உள்​ளிட்ட நாடு​களில் இருந்து இந்தியா​வுக்​குப் போதைப் பொருட்​கள் கடத்​தப்​படு​வது அதி​கரித்து வரு​கின்​றன. பொது​வாக சரக்​குக் கப்​பல், சரக்கு விமானங்​கள் மூலம் போதைப் பொருள் மும்​பைக்​குள் கடத்​தப்​படு​கிறது.

இந்​தச் சூழலில் போதைப் பொருள் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள், மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் 349 கிலோ கோகைன் போதைப் பொருளைப் பறி​முதல் செய்​துள்​ளனர். இதன் சர்​வ​தேச மதிப்பு ரூ.1,745 கோடி. இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்​சிபி) அதி​காரி​கள், மும்​பை​யில் 349 கிலோ கோகைன் பறி​முதல் செய்து உள்​ளனர். சிறிய அளவி​லான போதைப் பொருள் கடத்​தல்​களைத் தொடர்ந்து கண்​காணித்து மிகப்​பெரிய நெட்​வொர்க் கண்​டறியப்​பட்டு உள்​ளது. சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தலைக் கண்​டு​பிடித்த என்​சிபி குழு​வைப் பாராட்​டு​கிறேன்" என்று தெரி​வித்​துள்​ளார்.

மும்பை நிழல் உலக தாதா​வாக இருந்த தாவூத் இப்​ராகிம் தற்​போது பாகிஸ்​தானில் தலைமறை​வாக உள்​ளார். அவரது நெருங்​கிய கூட்​டாளி சலீம் டோலா அண்​மை​யில் துருக்​கி​யில் கைது செய்​யப்​பட்​டார். அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளார். அவரது கைதைத் தொடர்ந்து மும்​பை​யில் மிகப்​பெரிய அளவில் கோகைன் கைப்​பற்​றப்​பட்டு இருப்​ப​தாக மகா​ராஷ்டிர போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து என்​சிபி அதி​காரி​கள் கூறிய​தாவது: மும்​பை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு கோகைன் போதைப் பொருளை கடத்​திச் செல்​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதன்​பேரில், நவி மும்​பை​யின் கலம்​போலி பகு​தி​யில் வாகன சோதனை நடத்​தப்​பட்​டது. அப்​போது ஒரு சரக்கு வாக​னத்தை நிறுத்தி சோதனை செய்​தோம். அதில் இருந்து 136 மூட்​டைகளில் கோகைன் கைப்​பற்​றப்​பட்​டது. இதே​போல, தானே மாவட்​டம் பிவண்​டி​யில் உள்ள கிடங்​கில் 213 மூட்​டைகளில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த கோகைன் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட இயந்​திரங்​களுக்​குள் கோகைன் போதைப் பொருளை மறைத்து வைத்து இந்​தி​யா​வுக்​குள் கடத்தி வந்​திருப்​பது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இந்​த சர்​வ​தேச போதைப்​ பொருள்​ கடத்தல் கும்​பலுடன்​ தொடர்​பு உடைய நபர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறோம்​. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.