惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
L
LangChain Blog
美团技术团队
N
Netflix TechBlog - Medium
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
D
DataBreaches.Net
月光博客
月光博客
U
Unit 42
B
Blog RSS Feed
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
MongoDB | Blog
MongoDB | Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் இடையே ஜூன் 19-ல் அமைதி ஒப்பந்தம் கையெழு...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் 19-ம் தேதி கையெழுத்தாகிறது. ஒப்​பந்தம் கையெழுத்​தானவுடன் ஹார்​முஸ் ஜலசந்தி உடனடி​யாக திறக்​கப்​படு​கிறது. அங்கு அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை​யும் உடனடி​யாக விலக்கி கொள்​ளப்​படு​கிறது.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் ஈரான் கையெழுத்​திட மறுத்​த​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் தாக்​குதலை தொடங்​கின. இதில் ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அலி கமேனி உட்பட பலர் உயி​ரிழந்​தனர். ஈரானின் பல ராணுவ தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்​த போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இங்கு நூற்​றுக்​கணக்​கான கப்​பல்​கள் முடங்​கிய​தால் மாலுமிகளும் சிக்கித் தவித்​தனர். இங்கு அமெரிக்க கடற்​படை​யும் முற்​றுகை​யிட்டு ஈரான் துறை​முகத்​தின் கப்​பல் போக்​கு​வரத்தை தடுத்​தது. இது உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாட்டை அதி​கரித்து விலை உயர்​வை​யும் ஏற்​படுத்​தி​யது.

பின்னர், கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே சண்டை நிறுத்​தம் ஏற்​பட்​டு, போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் பாகிஸ்​தான் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​கள் இறங்​கின. செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை அமெரிக்​கா அல்​லது சர்​வ​தேச அணுசக்தி முகமை​யிடம் ஒப்​படைக்க வேண்​டும் அல்​லது அழிக்க வேண்​டும் என அமெரிக்கா கெடு விதித்​தது. இதற்கு ஈரான் சம்​ம​திக்​க​வில்​லை.

இதன் காரண​மாக இரு தரப்பு இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட இழுபறி ஏற்​பட்​டது. அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​தி​டா​விட்​டால் ஈரானை முற்​றி​லும் அழித்​து​விடு​வோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முறை எச்​சரித்​தார். ஆனால், ஈரான் தனது நிபந்​தனை​யில் உறு​தி​யாக இருந்​து, அமெரிக்கா தாக்​கி​னால், வளை​குடா நாடு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என எச்​சரிக்கை விடுத்​தது. இருதரப்பு இடையே அவ்​வப்​போது சிறிய அள​வில் மோதல்​களும் நடந்தன.

இந்த நிலையில், அணு ஆயுத தயாரிப்பை கைவிட ஈரான் சம்​மதம் தெரி​வித்​த​தால் சுமார் 2 மாதங்​களாக நீடித்த இந்த இழுபறி தற்​போது முடிவுக்கு வந்​துள்​ளது. அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட அமெரிக்கா​வும், ஈரானும் முடிவு செய்​துள்​ளன. சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் வரும் 19-ம் தேதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது. லெப​னானும் இந்த ஒப்​பந்​தத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது.

இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானவுடன் 19-ம் தேதி முதல் அனைத்து கப்​பல் போக்​கு​வரத்​துக்​கும் ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அதே நேரத்​தில், அமெரிக்க கடற்​படை முற்​றுகை உடனடி​யாக நீக்​கப்​படும் என்று ஈரான் தெரி​வித்​துள்​ளது. இதையடுத்து நேற்று இரவே எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்​கள் செல்​லத் தொடங்​கி​விட்​ட​தாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

முக்​கிய அம்​சங்​கள்: அமைதி ஒப்பந்தம் மூலமாக ஈரான் - அமெரிக்கா போர் உடனடி​யாக முடிவுக்கு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்​கப்​படு​கிறது. 30 நாட்​களுக்​குள் அமெரிக்க கடற்​படை முற்​றுகை நீக்​கப்​படும். லெப​னான் உட்பட அனைத்து முனை​களி​லும் போர் மற்​றும் ராணுவ நடவடிக்​கைகள் உடனடி​யாக​வும், நிரந்​தர​மாக​வும் முடிவுக்கு வரும்.

எண்​ணெய் விற்​பனை தொடர்​பாக ஈரான் மீதான தடைகள் நிறுத்தி வைக்​கப்​படும். அணு ஆயுத தயாரிப்​பில் ஈரான் ஈடு​ப​டாது. ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்ட 60 நாட்​களுக்​குள் அணுசக்தி விவ​காரங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு இறுதி ஒப்​பந்​தம் எட்​டப்​படும். ஈரானிய சொத்​து​களில் 24 பில்​லியன் டாலர்​களை விடுவிக்க வேண்​டும். இறுதி ஒப்​பந்​தம் குறித்த பேச்​சு​வார்த்​தைகள் 60 நாட்​களுக்​குள் நடை​பெறும்.

ட்ரம்ப் வாழ்த்து: இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘இந்த ஒப்​பந்​தம் ஒட்​டுமொத்த பிராந்​தி​யத்துக்​கும் அமை​தி, பாது​காப்​பை கொண்டு வரும். ஹார்​முஸ் ஜலசந்​தியை கட்​ட​ணமின்றி திறக்க இதன்மூலம் முழு அங்​கீ​காரம் அளிக்​கிறேன், அமெரிக்க கடற்​படை முற்​றுகையை உடனடி​யாக அகற்​ற​வும் உத்​தர​விடு​கிறேன். சர்​வ​தேச கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கட்​டும். எண்​ணெய் விநி​யோகம் தடை​யின்றி நடை​பெறட்​டும்’’ என தெரிவித்தார்.

அமைதி பேச்​சு​வார்த்​தை​யில் முதலில் ஈடு​பட்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் கூறும்போது, ‘‘புதி​தாக அறிவிக்​கப்​பட்​டுள்ள போர்​நிறுத்த அமைதி ஒப்​பந்​தம் மத்​திய கிழக்​கில் ஒரு புதிய சகாப்​தத்தை கொண்டு வரக்​கூடும். ஈரான் ஒரு​போதும் அணு ஆயுதத்தை வைத்​திருக்​காது என்று நாம் நம்​பிக்​கை​யுடன் கூற முடி​யும் இந்தஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த உதவிய வளை​குடா நாடு​கள், பாகிஸ்​தான் மற்​றும் அதிபர் ட்ரம்​ப்பின் ராஜதந்​திர நடவடிக்​கைக்கு பா​ராட்​டுகள்’’ என்​றார்​.

பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசிய மோதல் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. இதை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை முழுமனதோடு வரவேற்கிறேன்.

அந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும். இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்டப்படுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்​பந்​தத்​துக்கு துருக்​கி, கத்​தார் உள்​ளிட்ட பல்​வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்​துள்​ளன.