惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
A
About on SuperTechFans
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மின் கட்டண உயர்வு முடிவை கைவிடாவிட்டால் போராட்டம்” - வேல...
மு.வேல்சங்கர் · 2026-06-17 · via hindutamil

Updated on: 

சென்னை: மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிடாவிட்டால், மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இத்திட்டத்தின்படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே உதய் திட்டத்தின் கீழ் கடனுதவி கிடைக்கும் என்பதால், 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அந்த அளவுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்த வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் திமுக அரசு வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்தது.

2022-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அதிகபட்சமாக 6 சதவீதம் அல்லது முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதன்படி உயர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், “முதல்வர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்தாலும், அது மக்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கெனவே திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் மூட நேரிடும். இதனால் வேலை இழப்பு அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் மேலும் மோசமாகும்.

தவெக தேர்தல் அறிக்கையில் “மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை காரணம் காட்டி மீண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுப்பது நியாயமற்றது. தமிழகத்தில் ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை, நடுத்தர மக்கள் உள்பட பலர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். மக்கள் நலன் முதன்மை. எனவே, மின் கட்டண உயர்வு முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் மக்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.