惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
MyScale Blog
MyScale Blog
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
B
Blog RSS Feed
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
F
Fortinet All Blogs
MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
D
Docker
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மாணவர் பேரவை முதல் முதல்வர் வரை: சுவேந்து அதிகாரி கடந்து ...
2026-05-10 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் பாஜக முதல் முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றியது. முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி (55) நேற்று பொறுப்​பேற்​றார். இவர், 1970-ம் ஆண்டு டிசம்​பர் 15-ம் தேதி பிராமண குடும்​பத்​தில் பிறந்​தவர். இவரது குடும்​பம், கிழக்கு மேதினிப்​பூர் மாவட்​டத்​தின் காந்த் பகு​தி​யில் அரசி​யல் செல்​வாக்கு மிக்​கது. சுவந்​து​வின் தந்தை சிஷிர் அதி​காரி, தாயார் காயத்ரி அதி​காரி. கடந்த 2009 முதல் தொடர்ந்து 3 முறை காங்​கிரஸ் எம்​.பி​யாக இருந்​தவர் சிஷிர். பிரதமர் மன்​மோகன் சிங் அமைச்​சர​வை​யில் இணை அமைச்​ச​ராக​வும் இருந்​தவர்.

அதன் மூலம் அரசி​யல் பாடங்​களை வீட்​டில் இருந்தே கற்​றவர் சுவேந்​து. கடந்த 1989-ல் கல்​லூரி​யில் படிக்​கும் போது, காங்​கிரஸ் மாணவர் பேரவை மூலம் தனது அரசி​யல் பயணத்​தைத் தொடங்​கி​னார். பின்னர் 1995-ல், காந்த்தி நகராட்சி மன்ற தேர்​தலில் போட்டி​யிட்டு உறுப்​பின​ராகி தலை​வ​ராக​வும் பொறுப்​பேற்​றார்.

அதன்​பின்​னர் 1998-ல் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சியை (டிஎம்​சி) மம்தா தொடங்​கிய போது, அதி​காரி குடும்​பத்​தினர் அனை​வருமே அதில் இணைந்​தனர். கடந்த 2006-ல் சுவேந்து டிஎம்சி எம்​எல்​ஏ​வாக காந்த்​தி​யின் தெற்கு தொகு​தி​யில் தேர்​வா​னார். 2009 மக்​கள​வைத் தேர்​தலில் தம்​லுக் தொகு​தி​யில் 1,72,000 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இடது​சாரி வேட்​பாளரைச் சுவேந்து தோற்​கடித்​தார். நந்​திகி​ராமில் விவ​சா​யிகளின் நிலத்தை கையகப்​படுத்த இடது​சாரி அரசு எடுத்த முடிவை எதிர்த்து 2007-ல் போராட்​டம் தொடங்​கியது. இதில், தீவிர​மாகப் பங்​கேற்​றது சுவேந்து அதி​காரி​யின் வாழ்க்​கை​யில் திருப்​பு​முனை​யானது.

அவர் ‘பூமி உச்​சேத் பிர​திரோத் சமி​தி’ என்ற அமைப்பை உரு​வாக்​கி நந்​தி​கி​ராம் கிராமங்​களில் விவ​சா​யிகளைக் காக்​கும் அரணாகச் செயல்​பட்​டார்.

இதனால் கடந்த 2011-ல் 34 ஆண்டு கால இடது​சாரி அரசின் வீழ்ச்​சிக்கு நந்​தி​கி​ராம் போராட்​டம் வழி​வகுத்​தது. 2016 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்​ற​தால் எம்​.பி. பதவியை ராஜி​னாமா செய்த சுவேந்​து, முதல்​வர் மம்தா அரசில் அமைச்​ச​ரா​னார்.

மம்தா பானர்​ஜி​யின் விசு​வாசி​யாக இருந்​தவருக்கு 2020-ல் கருத்து வேறு​பாடு தொடங்​கியது. அதன்​பின் டிஎம்​சி​யில் இருந்து வில​கிய​வர், 2021-ல் பாஜக​வில் இணைந்​தார். 2021 தேர்​தலில், மம்தா நந்​தி​கி​ராமில் போட்​டி​யிட்ட போது அவரை எதிர்த்த சுவேந்து வெற்றி பெற்​றார். எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான சுவேந்​து, மேற்கு வங்க மாநில பாஜக​வின் முக​மாக உரு​வெடுத்​தார்.

பாஜகவை வெறும் 3 எம்​எல்​ஏக்​களில் இருந்து 77 என உயர்த்​தி​ய​வர் 2026 தேர்​தலில் ஆட்சி அமையக் காரண​மாகி விட்​டார். சுவந்​து​வின் சகோ​தரர் சவுமேந்​துக்​கு, சில மாதங்​களுக்கு முன்​பு​தான் திரு​மண​மானது. ஆனால், சுவேந்து இன்​னும் திரு​மணம் செய்​ய​வில்​லை.

இதுகுறித்து கேட்​டால், ‘‘எனது பகு​தி​யில் சுதந்​திரத்​துக்​காகப் போராடிய வீரர்​கள் சதீஷ் சமந்த், சுஷில் தாரா மற்​றும் அஜய் முகர்ஜி ஆகியோர் வழி​யில் நானும் திரு​மணம் செய்து கொள்​ளாமல் வாழ்க்​கையை அரசி​யலுக்கு அர்ப்​பணித்​துள்​ளேன்’’ என்று உறு​தி​யாகக் கூறி​னார். கடந்த 15 ஆண்டு கால மம்​தா​வின் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைத்து முதல் முறை​யாகப் பாஜக ஆட்சி அமைக்க சுவேந்​து​வின் பங்கு மிகப்பெரியது.