惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
Secure Thoughts
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
S
Securelist
T
Tor Project blog
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
L
LINUX DO - 最新话题
T
Troy Hunt's Blog
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
Cisco Talos Blog
Cisco Talos Blog
Latest news
Latest news
Google Online Security Blog
Google Online Security Blog
Forbes - Security
Forbes - Security
W
WeLiveSecurity
I
Intezer
K
Kaspersky official blog
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
Security Latest
Security Latest
Spread Privacy
Spread Privacy
H
Hacker News: Front Page
SecWiki News
SecWiki News
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
T
The Exploit Database - CXSecurity.com
P
Privacy & Cybersecurity Law Blog
N
News and Events Feed by Topic
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
L
LINUX DO - 热门话题
Help Net Security
Help Net Security
S
Schneier on Security
Schneier on Security
Schneier on Security
T
Tenable Blog
TaoSecurity Blog
TaoSecurity Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
爱范儿
爱范儿
博客园 - 三生石上(FineUI控件)
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
J
Java Code Geeks
月光博客
月光博客
V
Visual Studio Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
The Cloudflare Blog
腾讯CDC
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
L
Lohrmann on Cybersecurity
博客园 - 司徒正美
量子位
P
Palo Alto Networks Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
தவெக ஆட்சியில் தீர்க்கப்படுமா நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகள்?
ஒய்.டேவிட் ராஜா · 2026-05-26 · via hindutamil

மதுரை அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்.

Updated on: 

மதுரை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவ சாயிகளிடம் இருந்து இடைத் தரகர்களை தவிர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக் கப்பட்டுள்ளது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் ஒரு மூட்டைக்கு (40.580 கிலோ) ஆதரவு விலை தற்போது ஏ கிரேடு ரக நெல் குவின்டா லுக்கு ரூ.2,545, பொது ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2,500 நிர்ணயித்துள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. குறுவை (அக்டோபர் - டிசம்பர்), சம்பா (ஜனவரி - ஜூலை) ஆகிய அறுவடை பருவங்களில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய, அருகில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுக லாம் அல்லது முன்பதிவு மற்றும் விவரங்களை அறிய மின்னணு நேரடி கொள்முதல் மையத்தின் www.tncsc-edpc.tn.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடலாம்.

மதுரை மாவட்டத்தில் சுமார் 48 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விவசாயி அய்யாக்கண்ணு கூறுகையில், நேரடி கொள்முதல் நிலையங் களில் வெயில் காலத்தில் விவசாயிகள் தங்கள் நெல்லை உலர வைத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

ஆனால், மழைக்காலத்தில் நெல்லை உலரவைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இக்கால கட்டங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தினால் வசதியாக இருக்கும்.

இதற்கு, அரசு நெல் உலர வைக்கும் இயந்திரங்களை கையாண்டால் இந்த பிரச்சினை இருக்காது. நெல் மூட்டை எடை போட கூலி யாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 10 வழங்குகிறது.

இந்த கூலி போது மானதாக இல்லாத காரணத் தால் அவர்கள் விவசாயி களிடம் கூடுதல் தொகை ரூ.60 வரை வசூலிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே, இதை அரசு கருத்தில் கொண்டு, நெல் மூட்டை எடை போடும் தொழி லாளிக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வழங்கினால், விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலிப்பது தடுக்கப்படும்.

சில நேரங்களில் நெல் கொள் முதல் செய்யப்பட்டு 50 நாட் களுக்கு மேலாகியும் விவசாயி களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வராததால், அடுத்தடுத்த விவசாயப் பணிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதையெல்லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நலனை பாது காக்க வேண்டும் என அவர் கூறினார்.