惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
量子位
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
博客园 - 聂微东
aimingoo的专栏
aimingoo的专栏
Microsoft Security Blog
Microsoft Security Blog
U
Unit 42
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொ...
பெ.மாரிமுத்து · 2026-05-10 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் சிஎஸ்கே - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பேட்​டிங்​கில் ஏற்​பட்ட சரிவு​கள் மற்​றும் சொந்த மண்​ணிலும் வெளியூர் மைதானங்​களி​லும் சீரற்ற ஆட்​டத்​திறனை வெளிப்​படுத்​திய போதி​லும், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்​பில் இன்​னும் நீடிக்​கிறது.

நடப்பு சீசனில் சிஎஸ்​கே-​வின் பேட்​டிங் பெரும்​பாலும் சஞ்சு சாம்​சனை சார்ந்தே உள்​ளது. தொடக்க வீர​ராக அவர் அதிரடி​யான ஆரம்​பத்​தைக் கொடுக்​கும்​போது மட்​டுமே அந்த அணி​யின் வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக அமை​கிறது. சஞ்சு சாம்​சன் நங்​கூர​மாக​வும் அணி​யின் முது​கெலும்​பாக​வும் உரு​வெடுத்​துள்ள நிலை​யில், கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பேட்​டிங்​கில் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடி​யாமல் தடு​மாறி வரு​கிறார்.

கடைசி​யாக டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ருது​ராஜ் கெய்க்​வாட் 6 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில் சஞ்சு சாம்​சன் 52 பந்​துகளில் 87 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்​படக்​கூடும். நடு​வரிசை​யில் கார்​திக் சர்மா நம்​பிக்கை அளிக்​கத் தொடங்கி உள்​ளார். கடந்த இரு ஆட்​டங்​களி​லும் அவர், 54 மற்​றம் 41 ரன்​கள் சேர்த்​திருந்​தார். டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே ஆகியோ​ரும் மட்​டையை சுழற்​றி​னால் அணி​யின் பலம் அதி​கரிக்​கும்.

சேப்​பாக்​கம் மைதானம் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான தன்​மையி​லிருந்து மாறி, தற்​போது பேட்​டிங்​கிற்​கும் பந்​து​வீச்​சிற்​கும் சமமான வாய்ப்​புள்ள ஆடு​கள​மாக மாறி​யுள்​ளது. இருப்​பினும் ஆடு​களம் சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு ஓரளவுக்கு கைகொடுப்​ப​தால், சிஎஸ்கே அணி​யின் அகீல் ஹோசைன், நூர் அகமது ஆகி​யோர் நடு ஓவர்​களில் முக்​கிய பங்கு வகிக்​கக்​கூடும்.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி தொடர்ச்​சி​யாக 6 தோல்வி​களை சந்​தித்து இருந்த நிலை​யில் கடைசி​யாக மழை​யால் பாதிக்​கப்​பட்ட ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

புள்​ளிப்​பட்​டியலில் கடைசி இடத்​தில் போராடி வந்​தா​லும், இந்த வெற்றி லக்னோ அணி​யின் பிளே-ஆஃப் கனவை இன்​னும் உயிர்ப்​புடன் வைத்​துள்​ளது. ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மிட்​செல் மார்ஷ் 56 பந்​துகளில், 111 ரன்​களும், ரிஷப் பந்த் 10 பந்​துகளில், 32 ரன்​களும் விளாசி​யிருந்​தனர். மிட்​செல் மார்ஷ் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும்.

நிக்​கோலஸ் பூரனும் நம்​பிக்கை அளிக்​கும் வகை​யில் விளை​யாடத் தொடங்கி உள்​ளார். பந்​து​வீச்​சில் 16 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யுள்ள பிரின்ஸ் யாதவ் சிஎஸ்கே பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். சுழலில் ஷாபாஸ் அகமது, திக்​வேஷ் ராதி பலம் சேர்க்​கக்​கூடும்.

இதற்​கிடையே சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. இன்று காலை​யும் மழை பெய்​வதற்​கான வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது. எனினும் பிற்​பகலில் மழை பொழிவு இல்​லாமல் வானம் மேகமூட்​டத்​துடன் இருக்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இன்​றைய போட்டி திட்​ட​மிட்​டபடி தொடங்​கு​வ​தில்​ தாமதம்​ ஏற்​படக்​கூடும்.

ஆர்​சிபி - மும்பை மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ராய்ப்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி, 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது. ஆர்​சிபி அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று 3-வது இடத்​தில் உள்​ளது. மும்பை அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில்​ உள்​ளது.