惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
美团技术团队
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப...
2026-05-01 · via hindutamil

விநாயகர் சிலை, அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்​திருக்​கிறது. அவற்​றின் மதிப்பு ரூ.133 கோடி ஆகும்.

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு கடத்​தப்​பட்டு உள்​ளன. பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு அந்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வரு​கிறார். இதன்​படி பல்​வேறு பழங்​கால சிலைகள் மீட்​கப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்டு உள்​ளன.

இந்த வரிசை​யில் இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்டு அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்ட 657 பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் திருப்பி அளிக்​கப்​பட்டு உள்​ளன. அவற்​றின் மதிப்பு ரூ.133 கோடி ஆகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28-ம் தேதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 657 பழங்​கால சிலைகளை இந்​திய தூதரக அதி​காரி ராஜலட்​சுமி கடாம் பெற்​றுக் கொண்​டார்.

இதுகுறித்து அமெரிக்க அரசு வழக்​கறிஞர் ஆல்​வின் எல். பிராக் ஜூனியர் கூறும்​போது, “அமெரிக்கா முழு​வதும் இது​வரை 6,200-க்​கும் மேற்​பட்ட கலாச்​சார பொக்​கிஷங்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன. அவற்​றில் 5,900-க்​கும் மேற்​பட்ட அரிய பொருட்​கள் 36 நாடு​களுக்கு திருப்பி அனுப்​பப்​பட்டு உள்​ளன. இந்த வரிசை​யில் இந்​தி​யா​வில் இருந்து கடத்தி வரப்​பட்ட 657 தொல்​பொருட்​கள் இந்​திய மக்​களிடம் திருப்பி அளிக்​கப்​பட்டு உள்​ளன. இந்த பொருட்​கள் சுபாஷ் கபூர், நான்சி வீனர் உள்​ளிட்​டோ​ரால் அமெரிக்கா​வுக்கு பல்வேறு காலகட்டங்களில் கடத்தி வரப்​பட்​ட​வை” என்று தெரி​வித்​தார்.

சிலைகளின் விவரங்​கள்: சிங்​கங்​கள் இரு​புற​மும் அமர்ந்​திருக்​கும் சிம்​மாசனத்​தின் மீது இரட்​டைத் தாமரை பீடத்​தில் அமர்ந்​திருக்​கும் அவலோகிதேஸ்​வரரின் வெண்​கலச் சிலை இந்​தி​யா​விடம் திருப்பி வழங்​கப்​பட்டு இருக்​கிறது. ராய்ப்​பூரில் உள்ள மஹந்த் கசி​தாஸ் நினைவு அருங்​காட்​சி​யகத்​தில் இருந்து திருடப்​பட்ட அவலோகிதேஸ்​வரர் சிலை 1982-ம் ஆண்​டில் அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்​டது. இந்த பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் விரை​வில் இந்​தி​யா​வுக்கு கொண்​டு வரப்​பட உள்​ளன.